‘மேற்குவங்கத்தில் பாஜக தான் வெற்றிபெறும்’ - பிரசாந்த் கிஷோர் பேசியதாக வெளியான ஆடியோ!

பிரசாந்த் கிஷோர்

மேற்குவங்கத்தில் பாஜக தான் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸுக்கும் , பாஜவுக்கும் தான் நேரடி மோதல், அங்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி 3ம் அணியாக தான் கருதப்படுகிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3ம் முறையாக வெற்றி பெறும் நோக்கில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை மம்தா பானர்ஜி பணியமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து வழங்கி வரும் பிரசாந்த் கிஷோர், பாஜக தான் மேற்குவங்கத்தில் வெற்றி பெறும் என பேசியதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Clubhouse என்ற சாட் செயலியில் பத்ரிகையாளர்களிடையே இத்தகவல்களை பிரசாந்த் கிஷோர் பேசியதாக கூறி அந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிரசாந்த் கிஷோர் தான் பொதுவெளியில் பேசுகிறோம் என்பதையே மறந்துவிட்டு பேசியிருக்கிறார் என அமித் மால்வியா பதிவிட்டுள்ளார்.

Clubhouse சாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள பிரசாந்த் கிஷோர், “திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் இப்போது தூக்கி எரியப்பட்டுவிட்டது, மம்தா பானர்ஜி மீது மேற்குவங்க மக்களிடையே கோவம் உள்ளது, ஆனால் பிரதமர் மோடி மீது கோவம் கிடையாது. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில் கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த தேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் இஸ்லாமிய ஆதரவு அரசியல், இதன் காரணமாக பட்டியலின வாக்குகள் பாஜகவுக்கு ஆதரவாக செல்கிறது.

மேற்குவங்கத்தில் இந்தி பேசுவோர் ஒரு கோடி எண்ணிக்கையில் உள்ளனர், இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள், மதுவாஸ் சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள், இடதுசாரிகளுக்கு வாக்களிப்பவர்கள் கூட 10 - 15% பேர் பாஜக தான் ஆட்சி அமைக்கப்போகிறது என கருதி அக்கட்சிக்கு வாக்களிப்பார்கள். எனவே பெரும்பான்மையாக கருத்து பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்பதாக உள்ளது. 50 - 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. மேற்குவங்கத்தில் இத்தனை ஆண்டுகளாகவே சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்து வருகிறது” என பல்வேறு கருத்துக்களை பேசியிருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

இந்த ஆடியோ குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், அந்த ஆடியோவின் ஒரு பகுதியை மட்டும் பாஜக தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும், முழுமையாக பதிவு செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார்.பிரசாந்த் கிஷோர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக எனது பேச்சை தங்கள் தலைவர்களின் வார்த்தைகளை விட தீவிரமாக எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் (பாஜக) தைரியத்துடன் முழு சாட்டையும் காட்ட வேண்டும், அதன் சிறிய பகுதிகளை மட்டுமே வெளிப்படுத்தி உற்சாகமடையக்கூடாது.

நான் இதனை முன்பே கூறியிருக்கிறேன், அதையே இப்போதும் கூறுகிறேன். மேற்குவங்கத்தில் பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது’
Published by:Arun
First published: