• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும் பாஜகவை அசைக்க முடியாது - பிரசாந்த் கிஷோர் ஆருடம்

மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும் பாஜகவை அசைக்க முடியாது - பிரசாந்த் கிஷோர் ஆருடம்

Prashant kishor

Prashant kishor

நரேந்திர மோடியை அவ்வளவு எளிதில் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற ராகுல் காந்தியின் நினைப்பு  தவறானது. மோடியின் பலத்தை முழுமையாக உணர்ந்து கொள்ளாவிட்டால் அவருக்கு போட்டியை கூட உங்களால் (ராகுல்) ஏற்படுத்த முடியாது.

  • Share this:
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பல ஆண்டுகளுக்கு பாஜக நீடித்து இருக்கும் என்று பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலில் தேர்தல் சாணக்கியர் என்ற புகழ் பெற்று விளங்குபவர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். பாஜக, காங்கிரஸ் தொடங்கி தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என வடக்கு முதல் தெற்கு வரை அரசியல் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.

தொடக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது தனியாக ஐ-பேக் நிறுவனத்தின் மேலாண்மை பொறுப்பை கவனித்து வருகிறார். அண்மையில் இவர் பாஜக அரசை தூக்கி எறியும் நோக்கில் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பின்னர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Also read:   பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய மாணவர்கள் தேசதுரோக வழக்கில் கைது!

தற்போது கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாக தேர்தல் வியூகங்களை வகுத்து வழங்கும் பணிகளுக்காக பிரசாந்த் கிஷோர் கோவாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “இந்திய அரசியலின் மையப் புள்ளியாக பாஜக விளங்கும். பாஜக வெற்றி பெற்றாஉம் சரி தோல்வியடைந்தாலும் சரி, அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த கட்சி இந்திய அரசியலின் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது. தொடக்க காலங்களில் 40 ஆண்டுகள் காங்கிரஸ் மையப் புள்ளியாக இருந்தது போல பாஜக நிலைத்து நிற்கும். தேசிய அளவில் 30%க்கு கூடுதலான வாக்கு வங்கியை பெற்ற பின்னர் பாஜக இனி குன்றிவிடாது. அவ்வளவு எளிதில் நகர்ந்து செல்லாது.

எனவே மோடி மக்களின் கோவத்திற்கு ஆளாகிவிட்டார். மக்கள் அவரை தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற சிக்கலுக்குள் செல்ல வேண்டாம். ஒரு வேளை மக்கள் மோடியை தூக்கி எறிந்தாலும் கூட பாஜகவை அசைக்க முடியாது. நீங்கள் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜவுடன் தான் போட்டி போட வேண்டும்.

Also read:  போலி சமூக வலைத்தள கணக்குகளின் மூலம் மத மோதலை தூண்ட முயற்சி – போலீஸ் விளக்கம்

நரேந்திர மோடியை அவ்வளவு எளிதில் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற ராகுல் காந்தியின் நினைப்பு  தவறானது. மோடியின் பலத்தை முழுமையாக உணர்ந்து கொள்ளாவிட்டால் அவருக்கு போட்டியை கூட உங்களால் (ராகுல்) ஏற்படுத்த முடியாது.

நான் பார்த்த வரையில் பெரும்பாலனவர்களிடம் இருக்கும் ஒரு பிரச்னை, நரேந்திர மோடியின் பலம் என்ன, எதனால் அவர் இவ்வளவு பிரபலமாக திகழ்கிறார்? என்பதனை நேரம் செலவிட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே உங்களால் அவருக்கு போட்டியை ஏற்படுத்த முடியும் இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: