மார்பகம் வளர்ச்சி அடையவில்லை என்றாலும், தவறான எண்ணத்துடன் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது பாலியல் வன்கொடுமைதான் என்று 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்துகொண்ட அந்நபர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டதை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறினார். அவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின்போது, குற்றஞ்சாட்டவர் தரப்பில், “ யாராகினும் சிறுமியின் உடலில் எந்த பாகத்தை தொடுவதன் மூலம் பாலியல் எண்ணத்தோடு தொடுகிறார் என குற்றஞ்சாட்டப்படுகிறது. எனவே, இதற்கான ஆதாரம் உள்ளதா என்பதை நிரூபிக்க வேண்டும். சிறுமியை சோதித்த மருத்துவர், அவருக்கு மார்பகங்கள் வளர்ச்சி அடையவில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். எனவே இது பாலியல் சீண்டலாக இருக்காது’ என கூறி வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பிபேக் சௌத்ரி, “இந்த வழக்கில் மார்பகங்கள் வளர்ந்து இருந்ததா என்பது முக்கியமல்ல. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது உடலின் பல்வேறு பாகங்களை தொட்டு முத்தமிட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியிருக்கிறார். 13 வயது சிறுமிக்கு வளர்ச்சி அடையவில்லை என்றாலும் குறிப்பிட்ட பகுதி மார்பகம்தான்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அசாமில் கடும் மழை வெள்ளம் - 20,000 பேர் பாதிப்பு, 8 பேர் உயிரிழப்பு
உடலுறவுகொள்ளாவிட்டாலும் கூட அந்தரங்க பகுதிகளை தொடுவது என்பது பாலியல் ரீதியான சீண்டலாக தான் பார்க்கப்படுகிறது. சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாதபோது ஒருவயது வந்த நபர் ஏன் வீட்டிற்குள் நுழைந்து முத்தமிட வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான் என்று தீர்ப்பளித்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.