Home /News /national /

விவசாயச் சட்டங்களை எதிர்த்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்: பாஜக உறுப்பினரும் மவுனம்

விவசாயச் சட்டங்களை எதிர்த்து கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்: பாஜக உறுப்பினரும் மவுனம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் தங்களால் அதன் விளைவுகளைத் தாங்க முடியாது என்று கேரள அரசு தீர்மானத்தில் கூறியுள்ளது. அவையில் இருந்த ஒரே பாஜக உறுப்பினரும் தீர்மானத்தை எதிர்க்காமல் மவுனம் காத்தார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மத்திய அரசு இயற்றிய 3 விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விவசாயிகள் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில் தங்களால் அதன் விளைவுகளைத் தாங்க முடியாது என்று கேரள அரசு தீர்மானத்தில் கூறியுள்ளது. அவையில் இருந்த ஒரே பாஜக உறுப்பினரும் தீர்மானத்தை எதிர்க்காமல் மவுனம் காத்தார்.

    விவசாயச்சட்டங்களை எதித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர், அன்னிய, உள்நாட்டுச் சக்திகள் இந்தப் போராட்டத்துக்கு தூபம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

    இன்று தீர்மானத்தைத் தாக்கல் செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “வேளாண் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்து அதனை தேவையானவர்களுக்கு நியாயமான விலையில் விற்கும் அமைப்பு தேவை. மாறாக பெருநிறுவனங்களிடம் விற்பனை உரிமையை அளித்துள்ளது மத்திய அரசு. விவசாயிகளுக்கு நியாய விலை கொடுப்பதன் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொள்ளப் பார்க்கிறது.

    இந்த விவசாயப் போராட்டங்கள் தொடர்ந்தால் அது கேரளாவை வெகுவாகப் பாதிக்கும். கேரளாவுக்கு விளைபொருட்கள் வரவில்லை என்றால் மாநிலம் பட்டினிக்குத் தள்ளப்படும்.

    தற்போதைய குறைந்தபட்ச ஆதார விலையை இழந்து விடுவோம் என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். இதனால் பெருநிறுவனங்களின் பேர வலுவில் விவசாயிகள் தரப்பு பாதிக்கப்படவே செய்யும்.

    இவையனைத்தையும் பரிசீலித்த பிறகே கேரள அரசு விவசாயச் சட்டங்களை வாபஸ் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க கோரிக்கை வைக்கிறது” என்றார்.

    இதில் பெரிய முரண் என்னவெனில் விவசாயிகளின் போராட்ட அம்சங்களில் முக்கியமான ஒன்று வேளாண்பொருள் மார்க்கெட் கமிட்டி என்ற மண்டிகளை தக்க வைக்க வேண்டும் என்பதே. இது கேரளாவில் கடைப்பிடிக்கப்படவில்லை. இதற்கு மாற்று அமைப்புகளை கேரளா ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Farmers Protest Delhi, Kerala cm, Kerala CM Pinarayi Vijayan

    அடுத்த செய்தி