• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமேசான் உதவியால் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார்... விசாரணை தீவிரம்

அமேசான் உதவியால் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகார்... விசாரணை தீவிரம்

மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விதிகள் வகுக்கப்படும். இந்த தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

  • Share this:
    அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று கஞ்சாவை டெலிவரி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு தராவிட்டால் அமேசான் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு எச்சரித்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் கடந்த வாரம் பிடிபட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இதற்கு காரணம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அமேசான் நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு அமேசான் தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

    அமேசான் நிறுவனத்தை பயன்படுத்தி கஞ்சா கடத்தல் நடந்திருப்பது என்பது மிக முக்கியமான பிரச்னை. இந்த விஷயத்தில் அமேசான் தரப்பில் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. இனியும் ஒத்துழைப்பு தராவிட்டால், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள்.

    அமேசானில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் ஒன்று, 12 இடங்களில் கஞ்சாவை விற்பனை செய்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஆன்லைன் வியாபாரத்தில் எந்தவொரு விதிகளும் வகுக்கப்படவில்லை. அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை பயன்படுத்தி ஆயுதங்களைக் கூட விற்பனை செய்யலாம்.

    மத்திய பிரதேசத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விதிகள் வகுக்கப்படும். இந்த தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: