முகப்பு /செய்தி /இந்தியா / தொழிலாளர்களுக்கான பி.எஃப். சலுகை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

தொழிலாளர்களுக்கான பி.எஃப். சலுகை நீட்டிப்பு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்த ஆண்டு ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் விநியோகத்திற்கான நிதி செலவு ரூ .93,869 கோடியாக இருக்கும். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ .2,27,841 கோடியாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆத்ம நிர்பார் பாரத்  ரோஜ்கர்  திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பி.எஃப். சலுகை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பல்வேறு பொருளாதார அறிவிப்புகளை வெளியிட்டார், அப்போது, ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனாவின் கீழ், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ்  சலுகை அறிவிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, ஊழியர்களின் மாத ஊதியம்  ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதம் என 24 சதவீதம் 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். ஒருவேளை வேலை வழங்கும் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால், பணியாளர்கள் பங்களிப்பான 12 சதவீதம் மட்டும் வழங்கப்படும்.  இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

மேலும், இந்த ஆண்டு ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் விநியோகத்திற்கான நிதி செலவு ரூ .93,869 கோடியாக இருக்கும். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ .2,27,841 கோடியாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

First published:

Tags: Minister Nirmala Seetharaman