EPFO தொடர்பான கேள்விகளுக்கு வாட்ஸ்-அப் ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்..  எளிமையாக பயன்படுத்தலாம்..

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஒரு வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செய்தி பயன்பாட்டின் மூலம் 1,64,040-க்கும் மேற்பட்ட குறைகளையும், கேள்விகளையும் நிவர்த்தி செய்துள்ளதாக ஈபிஎஃப்ஒ தெரிவித்துள்ளது.

EPFO தொடர்பான கேள்விகளுக்கு வாட்ஸ்-அப் ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்..  எளிமையாக பயன்படுத்தலாம்..
வாட்ஸ்-அப் ஹெல்ப்லைன் சேவை
  • Share this:
வாட்ஸ்-அப் சேவைகள் தொடங்கிய பிறகு, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களில் குறைகளை பதிவு செய்வது 30 சதவீதம் குறைந்துள்ளதை ஓய்வூதிய நிதி அமைப்பு கண்டறிந்துள்ளது.

மேலும், புதிய சேவையை அறிமுகப்படுத்தியதிலிருந்து ஈ.பி.எஃப்.ஓ ஆன்லைன் குறை தீர்க்கும் போர்ட்டலான EPFiGMS-ல் வினவல்களின் பதிவு 16 சதவீதம் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக  ஈ.பி.எஃப்.ஓ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " அனைத்து 138 பிராந்திய ஈ.பி.எஃப்.ஓ அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை செயல்படுகிறது.

இந்த குறை தீர்க்கும் புதிய வழிமுறை சந்தாதாரர்களை தன்னம்பிக்கையுடன் இருக்க செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம், ஓய்வூதிய நிதி அமைப்பு தனது டிஜிட்டல் முன்முயற்சியை கடைசி மைலுக்கு கொண்டு செல்ல விரும்புகிறது. மேலும் இந்த நடவடிக்கையால் இடைத்தரகர்களைச் பிஎஃப் பயனாளர்கள் சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும்" என்று குறிப்பிட்டுள்ளது.


EPFO WhatsApp சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?

1. உங்களிடம் வாட்ஸ்அப் செயலி இல்லை என்றால், ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்து, சரியான மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்களுக்கான கணக்கை உருவாக்க வேண்டும்.

2. அதன்பிறகு, https://www.epfindia.gov.in/site_en/index.php இல் EPFO இன் வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.3. உங்கள் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தின் பிரத்யேக வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணைத் தேடி எடுக்க வேண்டும்.

4. பின்னர், உங்கள் ஸ்மார்ட்போனில் அந்த எண்ணைச் சேமிக்க வேண்டும்.

5. எண்ணைச் சேமித்த பிறகு, வாட்ஸ்அப்பைத் திறந்து அந்த எண்ணைக் கிளிக் செய்ய வேண்டும்.

6. அதில், உங்கள் வினவல் அல்லது குறைகளை எழுதி send ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

7. இறுதியில் உங்கள் வினவில் அல்லது குறைகளுக்கான பதில்களை ஈபிஎஃப்ஒ-விடம் இருந்து பெறுவீர்கள்.

இந்த வசதி சந்தாதாரர்களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கேள்விகளைக் கேட்க மிக எளிதான முறையை ஈபிஎஃப்ஒ வழங்கியுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் எந்தவொரு குறைகளுக்கும் சந்தாதாரர்கள் இப்போது ஈபிஎஃப்ஒ அலுவலகத்தை பார்வையிட தேவையில்லை.

மேலும் படிக்க.. இருசக்கர வாகன பயன்பாடு அதிகரிப்பதால் விபத்துகள் உயர்வு: கொரோனா ஊரடங்கிற்கு பின் எழும் புதிய சிக்கல்கள்..



இதனால் ஈபிஎஃப்ஒ அலுவலகங்களில் மக்கள் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க முடியும். இந்த சேவை EPFiGMS போர்ட்டல், CPGRAMS மற்றும் சமூக ஊடக தளங்களை உள்ளடக்கிய குறை தீர்க்கும் வழிமுறைகளுக்கு கூடுதல் அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, சந்தேகங்களை தீர்ப்பதற்கான பிரத்யேக 24 × 7 அழைப்பு மையத்தையும் EPFO செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading