• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டாப் முதலாளிகளுக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) சமீபத்திய செய்தி என்ன?

டாப் முதலாளிகளுக்கும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) சமீபத்திய செய்தி என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organization (EPFO)) முதன்மை முதலாளிகளுக்கான மின்னணு வசதியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

  • Share this:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்திர சம்பளத்தில் தொழில்தரும் முதலாளியின் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்த பங்களிப்பு பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் அரசிடமிருந்து கொள்ளலாம். 

அந்த வகையில் EPFO சமீபத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. முதலாளிகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு EPFO-இன் நல்ல செய்து ஒன்று உள்ளது. அது என்னவென்றால் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees' Provident Fund Organization (EPFO)) முதன்மை முதலாளிகளுக்கான மின்னணு வசதியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த வசதியைத் தொடங்குவதன் மூலம், முதன்மை முதலாளிகள் தங்கள் ஒப்பந்த தொழிலாளர்களின் EPF பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம். முதன்மை முதலாளிகளுக்கான மின்னணு வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து EPFO பின்வருமாறு ட்வீட் செய்தது, அதில், "EPFO PRINCIPAL EMPLOYERS-க்கு தங்கள் ஒப்பந்த தொழிலாளர்களின் EPF இணக்கங்களைக் காண இனி மின்னணு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளது. 

இப்போது, ஒப்பந்தக்காரர்கள் மூலம் பணியாளர்களை ஈடுபடுத்தும் EPFO பதிவு செய்யப்பட்ட முதலாளிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் விவரங்களை EPFOவின் ஒருங்கிணைந்த போர்ட்டலில் சேர்க்கலாம்.

https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/

இதற்கிடையில், EPFO-ல் பதிவு செய்யப்படாத முதன்மை முதலாளி (PE) தங்கள் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் விவரங்களைச் சேர்க்க உள்நுழைவு / கடவுச்சொல்லைப் (Password/Login id) பெற ஒருங்கிணைந்த போர்ட்டலில் பதிவு செய்யலாம். விவரங்களைச் சேர்க்க, முதல் உள்நுழைவுக்குப் பிறகு அவர்கள் நிரந்தர உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும். கடவுச்சொல்லையோ / உள்நுழைவு ஐடியையோ மறந்துவிட்டால், அவர்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் SMS மூலம் அதைப் பெற 'Forgot password link'ஐ பயன்படுத்தலாம். 

தவறான கடவுச்சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் உங்கள் கணக்கு லாக் செய்யப்பட்டிருந்தால், 'Unlock account link'ஐ பயன்படுத்தவேண்டும். ஒப்பந்தக்காரரின் விவரங்களைச் சேர்க்கும்போது, எலக்ட்ரானிக் சல்லன் கம் ரிட்டர்ன் (Electronic Challan cum Return (ECR)) மூலம் ஒப்பந்தக்காரர்களால் பணியாளர் வாரியாக பணம் அனுப்புவதை PE அவர்களின் Login மூலம் பார்க்க முடியும்.  PE இப்போது தங்கள் ஒப்பந்தக்காரர்கள் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சேர்ப்பதை உறுதிசெய்து ECR மூலம் EPF பங்களிப்புகளை அனுப்ப முடியும். ECR ஆனது ஏப்ரல் 2012 இல் தொடங்கப்பட்டது, இதன்மூலம் முதலாளிகள் தங்களது வருமானத்தை ஆன்லைனில் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.  

இதுபோன்று பல அப்டேட்களை EPFO சமீபகாலமாக அளித்து வருகின்றது. முன்னரெல்லாம் PF பற்றி தெரிந்துகொள்ள, அல்லது அப்பளை செய்துவிட்டு எப்போது பணம் கிடைக்குமென்று நீண்ட நாள் காத்திருக்கவேண்டும். ஆனால் இப்போது அவையெல்லாம் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னரும் கூட EPFO ஆனது மத்திய அரசுடன் ஏற்பட்ட பல்வேறு ஆலோசனைக்குப் பின்பு முன்னர் அறிவிக்கப்பட்ட 2019-20ஆம் நிதியாண்டுக்கான 8.5 சதவீத வட்டி வருமானத்தைத் தனது 6 கோடி வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்தது. இதுபோன்ற பல குட் நியூஸ்களை EPFO வெளியிட்டு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Gunavathy
First published: