ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும் - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும் - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
  • News18
  • Last Updated: January 19, 2020, 7:20 AM IST
  • Share this:
ஒப்பந்த பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான "பவன் ஹன்ஸ் லிமிடெட்" நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 270 ஒப்பந்த பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இதனை எதிர்த்து தொழிலாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நிறுவனம் தங்களிடம் பணியாற்றுபவர்களை நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என வேறுபடுத்தி பார்க்க முடியாது என குறிப்பிட்டது.


வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழ் சாதாரண தொழிலார்களின் சமூக பாதுகாப்பு பலன்கள் உறுதி செய்யப்படுவதாக கூறிய நீதிபதிகள், 270 ஒப்பந்த பணியாளர்களுக்கும் 2017 ஜனவரி மாதம் முதல் 2019 டிசம்பர் மாதம் வரை வருங்கால வைப்பு நிதி பலன்களை அளிக்க உத்தரவிட்டனர்.
First published: January 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading