முகப்பு /செய்தி /இந்தியா / மேகதாது அணை திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதல் இருந்தால் தான் சுற்றுச்சூழல் அனுமதி - மத்திய அரசு திட்டவட்டம்

மேகதாது அணை திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதல் இருந்தால் தான் சுற்றுச்சூழல் அனுமதி - மத்திய அரசு திட்டவட்டம்

mekedatu dam

mekedatu dam

Mekedattu Dam: காவிரிக்கு குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் சுமூகமாக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்ட பிறகே வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி தரப்பட்டுவிட்டதா என்றும், அப்படி இல்லையேல் அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும் என்றும் கர்நாடக எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, கர்நாடகாவின் பரிந்துரையை மத்திய அமைச்சகம் அமைத்த மதிப்பீட்டு நிபுணர் குழு பரிசீலித்ததாகவும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கர்நாடகாவுக்கு தமிழகத்துடன் சுமுக நிலை ஏற்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருப்பதாக கூறினார்.

Also read:  கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து - தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது - மாநில தேர்தல் ஆணையம் அதிரடி..

காவிரிக்கு குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு மேகதாது அணைத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது காங்கிரஸ் கட்சி சார்பில் மேகதாது அணையை விரைந்து கட்ட வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பாதயாத்திரை நடத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.

First published:

Tags: Mekedatu, Mekedatu dam