• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • EIA 2020-க்கு எதிரான கருத்துக்கள் முதிர்ச்சியற்றவை.. இது வரைவுதான் இறுதி அறிவிப்பல்ல - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

EIA 2020-க்கு எதிரான கருத்துக்கள் முதிர்ச்சியற்றவை.. இது வரைவுதான் இறுதி அறிவிப்பல்ல - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

பிரகாஷ் ஜவடேகர்

EIA எதிர்வினைகள் அனைத்தும் முதிர்ச்சியற்றவை எனவும், இது வரைவு நிலையில் இருக்கிறது எனவும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    kuEIA 2020 வரைவுக்கு எதிராக எழும் பதில் வினைகள் மிகவும் முதிர்ச்சியற்றவை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    EIA 2020 வரைவுக்கு எதிராக எழும் எதிர்வினைகள் அனைத்தும் முதிர்ச்சியற்றவை எனவும், இது வரைவு நிலையில் இருக்கிறது. இதுவே இறுதியான அறிவிப்பல்ல. இதற்காக வந்திருக்கும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொண்டு இருக்கிறோம். அந்தப் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு அதன் பிறகு, இறுதியான வரைவை வெளியிடுவோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

    ”EIA 2020 வரைவு ஒரு பேரழிவு. அது ஏற்படுத்தப்போகும் சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாக பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை அரசு ஒடுக்குவதற்கு முயற்சி செய்கிறது. ஒவ்வொரு இந்தியரும் எழுச்சி பெற்று இந்த வரைவை எதிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒவ்வொரு போரிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது இளைஞர்கள், இந்த காரணத்துக்காக நிச்சயம் போராட வேண்டும்.

    மேலும் படிக்க: 2100 கிலோ எடை.. அயோத்தி ராமர் கோவில் மணியை வடிவமைத்த இஸ்லாமியர் இக்பால்..

    இது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டம். அரசியல் மற்றும் கருத்தியல் நம்பிக்கைகளை கடந்த ஒரு போராட்டமாக இதை முன்னெடுக்க வேண்டும். சமீபத்திய கோவிட் 19 தொற்றுநோய் மனித வாழ்க்கை எவ்வளவு பலவீனமானது என்பதைக் காட்டுகிறது. ஏற்கனவே விளிம்பில் வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு, சூழல் என்பது ஒரு சுருக்கமான சொல் அல்ல, அது அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் வாழ்வாதார பிரச்சினை. EIA 2020 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டால், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீரழிவின் நீண்டகால விளைவுகள் நமக்கும் எதிர்கால தலைமுறை இந்தியர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று தனது ஃபேஸ்புக் பதிவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: