முகப்பு /செய்தி /இந்தியா / ஒரு முட்டை தோசைக்காக உயிரை விட்ட இன்ஜினியரிங் மாணவர்

ஒரு முட்டை தோசைக்காக உயிரை விட்ட இன்ஜினியரிங் மாணவர்

egg dosai

egg dosai

தனது நண்பர்களுக்கு இந்த குளத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முட்டை தோசைக்கு பெற்றோர் பணம் கொடுக்காததால் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் மாணவர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாக்கால மண்டலம் தலாரிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய் கிரண் (வயது 21), இவர் சித்தூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

நேற்று காலை கல்லூரிக்குச் செல்லும் வழியில் காலை உணவுக்காக முட்டை தோசை  வாங்கி சாப்பிட பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். பெற்றோர் பணம் தர மறுத்ததால் விரக்தி அடைந்த அந்த மாணவன் கிராமம் அடுத்து உள்ள ஒரு குட்டையில் குதித்துள்ளார்.

முன்னதாக தனது நண்பர்களுக்கு இந்த குளத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார். இதனையடுத்து நண்பர்கள் பெற்றோருக்கு இந்த தகவலை அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் ஒவ்வொரு குளமாக தேடிச் சென்ற நிலையில் எங்கும் கிடைக்கவில்லை.

Also Read:    இந்தியாவின் மிகப்பெரிய மதமாற்ற கும்பலின் பின்னணியில் இருந்த மவுலானா கலீம் சித்திகி கைது!

இதனை அடுத்து இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் ஆணின் பிணம் மிதப்பதாக அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அளித்த தகவலின்பேரில் கிராமத்தினர் அங்கு சென்று குட்டையில் இறங்கி மாணவர் சாய் கிரனை பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பாக்கால காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முட்டை தோசைக்காக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Andhra Pradesh, Egg, Engineer suicide, News On Instagram, Suicide