• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ‘அந்த பையனின் ஆத்மா அழைக்கிறது’ - கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை

‘அந்த பையனின் ஆத்மா அழைக்கிறது’ - கடிதம் எழுதி வைத்து இளைஞர் தற்கொலை

சவுரப் நாக்புர்கார்

சவுரப் நாக்புர்கார்

தான் கண்ணால் பார்த்த விபத்தில் இறந்த சிறுவனின் ஆத்மா அழைப்பதாக கூறி பொறியல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு மாதத்துக்கு முன்னர் தான் கண்ணால் பார்த்த விபத்தில் இறந்த சிறுவனின் ஆத்மா தன்னை அழைப்பதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு பொறியியல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சவுரப் நாக்புர்கார். 19 வயதான இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டில் சகோதரியின் துப்பட்டாவால் தூக்கு போட்ட நிலையில், அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை நடத்திய போது, இரண்டு பக்க கடிதம் சிக்கியது. அதில், தான் கண்ணால் பார்த்த விபத்தில் பலியான சிறுவனின் ஆத்மா தன்னை அழைப்பதாக சவுரப் கூறியுள்ளார். மேலும், தனது பெற்றோர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும், அவர்களை சகோதரி நல்லபடியாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சவுரப் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த விபத்தை கண்ணால் பார்த்ததும் தான் பேய் பிடித்தது போல உணர்ந்ததாகவும் சவுரப் தனது கடிதத்தில் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்த போலீசார் சவுரப்பின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மாதம் உம்ரெர் சாலையில் நடந்த விபத்து ஒன்றில் பெண் மற்றும் ஒரு சிறுவன் பலியாகினர். அதனை சவுரப் நேரில் பார்த்தார் என தெரியவந்தது.

    கடந்த மாதம் தனது பிறந்த நாளை ஆதரவற்ரோர் இல்லத்தில் வைத்து கொண்டாடிய சவுரப், தனது நண்பர்களும் இதே போல பிறந்த நாளை கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது இந்த திடீர் மரணம் நண்பர்கள், குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: