ஹோம் /நியூஸ் /இந்தியா /

மின் இணைப்பை துண்டித்த இன்ஜினியர் மீது சரமாரி தாக்குதல்... தெலங்கானாவில் பரபரப்பு

மின் இணைப்பை துண்டித்த இன்ஜினியர் மீது சரமாரி தாக்குதல்... தெலங்கானாவில் பரபரப்பு

2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை துண்டிக்க வந்த இன்ஜினியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை துண்டிக்க வந்த இன்ஜினியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை துண்டிக்க வந்த இன்ஜினியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஷால். இவர் தனது தாயாருடன் கர்வான் பகுதியில் வசித்து வருகிறார். விஷால் கடந்த 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கர்வான் துணை மின் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி விஜய குமார் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர், மின் கட்டணம் செலுத்தாதவர்களின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் விஷால் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மின் வாரிய அலுவலகத்திற்கு திரும்பிய இன்ஜினியர் விஜய குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் உச்சகட்டத்தை அடைந்து, விஜயகுமாரை விஷால் தாக்கினார்.

இதுதொடர்பாக இன்ஜினியர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில் விஷால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஷால் கடந்த 2 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும், இதற்கான தொகை ரூ. 15 ஆயிரம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க - மத்திய அமைச்சரின் மகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து

இதற்கிடையே, மிகவும் பழமையான நூலகங்களில் ஒன்றான ஐதராபாத்தின் கிரந்தாலயா சமஸ்தாவில் கடந்த சில நாட்களாக மின்சார வசதி இல்லையென்று புகார்கள் எழுந்துள்ளன.  நூலகங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், தேர்வுக்கு தயாராகும் அரசுப் பணிக்கான விண்ணப்பதாரர்கள் சிரமப்படுகின்றனர்.

இதையும் படிங்க - 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வு...

முறையான பராமரிப்பு இல்லாத 69 ஆண்டுகள் பழமையான வரலாற்று கட்டிடமாக இந்த நூலகம் இருந்து வருகிறது. இதனை அரசு தேர்வு ஆர்வலர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். நகரத்தின் பழமையான நூலகங்களில் ஒன்றான இது 1953 இல் நிறுவப்பட்டது. இங்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

சட்டம், மருத்துவம், வரலாறு மற்றும் அகராதிகள் பற்றிய குறிப்புப் புத்தகங்கள் தவிர, எம்ப்ளாய்மென்ட் நியூஸ், குழந்தைகள் புத்தகங்கள், இதழ்கள் மற்றும் நாளிதழ்கள், உருது, ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பத்திரிக்கைகளும் இங்கு கிடைக்கின்றன. இந்நிலையில் இங்கு மின் வசதியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும் வாசகர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

First published:

Tags: Hyderabad, Telangana