மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் சித்தல்குச்சி தொகுதி திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கும் இடையேயான செல்போன் உரையாடல் எனக் கூறி பாஜக ஆடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், 4ம் கட்ட தேர்தலின்போது சித்தல்குச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டாம் என்றும், இதனைவைத்து தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்றும் மம்தா பானர்ஜி கூறியதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை திரிணமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது.
இந்நிலையில், அசன்சோலில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைந்ததும், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என கூறினார். தொழில் நகரான அசன்சோலில் உள்ள தொழிற்சாலைகளிலும் பணிபுரிவதற்காக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரும் நிலை மாறி, தற்போது அகதிகளாக வெளியேறி வருவதாக கவலை தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து சட்டமன்ற தேர்தலை நிறுத்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். சித்தல்குச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததை வைத்து திரிணமுல் காங்கிரஸார் அரசியல் செய்வதாகவும் விமர்சித்தார்.
இதனிடையே, கல்சி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவினர் ஆளும் திரிணமுல் காங்கிரஸின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த பிரசாரத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்தார். தனது செல்போனில் அன்றாட உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரத்தில் சிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க... அதிகரிக்கும் கொரோனா; ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு - திணறும் தலைநகர்!
இதனிடையே, வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக-வால் மட்டுமே ஊடுருவல்காரர்களை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார். மே-2ம் தேதி மம்தா பானர்ஜி பதவியில் இருந்து விலகுவார் என்றும், பாஜக 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறினார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mamta banerjee, PM Narendra Modi, Voter List, West Bengal Assembly Election 2021