ரூ.1,900 கோடி பண மோசடி வழக்கில் முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கே.டி.சிங் கைது
2015ம் ஆண்டு வரையிலும் பொதுமக்களிடம் பல்வேறு ஏமாற்றுத் திட்டங்களை முன்வைத்து ரூ.1916 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

- News18 Tamil
- Last Updated: January 13, 2021, 7:45 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், தொழிலதிபருமான கே.டி.சிங் பண மோசடி வழக்கில்
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Alchemist Group ஊழல் மற்றும் வீட்டு வசதி ஊழல் ஆகியவற்றுடன் தொடர்புடைய விவகாரத்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கே.டி.சிங்கிற்கு தொடர்புடைய இடங்களில் கடந்த 2019ம், ஆண்டு பல முறை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
Alchemist Group-ன் நிறுவனரான் கே.டி.சிங் கடந்த 2012 வரை அந்நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார்.
இவ்விரண்டு பண மோசடி வழக்குகளிலும் சுமார் 1,900 கோடி ரூபாய் பொதுமக்களின் பணம் ஏமாற்றப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.இதன் காரணமாக கடந்த 2019 ஜனவரியில் அக்குழுமத்திற்கு சொந்தமான 239 கோடி ரூபாய் சொத்து அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது.
2015ம் ஆண்டு வரையிலும் பொதுமக்களிடம் பல்வேறு ஏமாற்றுத் திட்டங்களை முன்வைத்து ரூ.1,916 கோடி வசூல்
செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2016ல் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக கே.டி.சிங் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கே.டி.சிங் கைது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சவுகதா ராய் கூறுகையில், Alchemist Group எனும் நிறுவனத்தை கே.டி.சிங் நடத்தி வந்தது உண்மை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு முறை அவர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் உண்மை, ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என கூறினார்.
அடுத்த சில மாதங்களில் மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Alchemist Group ஊழல் மற்றும் வீட்டு வசதி ஊழல் ஆகியவற்றுடன் தொடர்புடைய விவகாரத்தால் திரிணாமுல்