முகப்பு /செய்தி /இந்தியா / ‘ரூ. 600 கோடி மதிப்பிலான சொத்துகள் கைமாறியுள்ளன’ - லாலு பிரசாத் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

‘ரூ. 600 கோடி மதிப்பிலான சொத்துகள் கைமாறியுள்ளன’ - லாலு பிரசாத் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

முறைகேடாக வந்த பணம் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

ரயில்வே வேலைக்காக ரூ. 600 கோடி மதிப்பிலான சொத்துகள் கைமாறியுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ரூ.250 கோடி சட்டவிரோத பரிமாற்றம் உள்பட குற்றச்சாட்டுக்களை அமலாக்கத்துறை அடுக்கியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்சராக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பொறுப்பில் இருந்தார். இந்த கால கட்டத்தில் ரயில்வே துறையில் வேலையை பெற்றுத் தருவற்கு அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த புகாரின் பேரில், லாலுபிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகன்கள் உள்பட குடும்பத்தினரிடம் சிபிஐ தரப்பில் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் லாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவற்றின் விபரங்களை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் லாலு பிரசாத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்குகளில் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் கைமாறியுள்ளன. ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்த மோசடி நடந்திருக்கிறது. சோதனையின்போது கணக்கில் வராத ரூ. 1 கோடி பணம், அமெரிக்கா டாலர்கள், தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முறைகேடாக வந்த பணம் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Enforcement Directorate, Lalu Prasad Yadav