அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின.
இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங்இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது. இதனிடையே, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
ராகுல் காந்தி ஜூன் 2 ஆம் தேதியும், சோனியா காந்தி ஜூன் 8 ஆம் தேதியும் ஆஜராகும்படி நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 5 ஆம் தேதிக்குப் பின்னர் தான் வெளிநாடு செல்வதால் கால அவகாசம் வேண்டும் என்று கோரியுள்ளார்.
Money-laundering without money is like alleging purse snatching without a purse
It is like alleging that you were found unauthorisedly swimming in a pool that had no water
You can think of more examples (each one more absurd than the other)
சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில், ‘பணம் புழங்காமல் பணம் மோசடி என்பது பர்ஸ் இல்லாமல் பர்ஸை திருட்டு நடந்தது என்பது போன்ற குற்றச்சாட்டு. தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் அனுமதி இல்லாமல் குளித்தீர்கள் என்று குற்றச்சாட்டுவது போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.