இந்திய கடல் பகுதியில் அரியவகை நீலத்திமிங்கலம் - ஆய்வில் உறுதி!

நீலத்திமிங்கலம்

இந்திய கடல் பகுதியில் அரியவகை நீலத்திமிங்கலங்கள் இருப்பதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கடல்வாழ் உயிரினமான திமிங்கலங்களை பார்ப்பதற்கு அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஆனால், உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் நீர் மாசுபாடு காரணமாக கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வும் கேள்விக்குறியாகியுள்ளது. ரசாயன கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் நீரில் கலப்பதால், திமிங்கலங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன.

குறிப்பாக, இந்திய கடல் பகுதியில் நீலத் திமிங்கலங்களின் வருகை இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகம் இந்திய கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.

இந்தியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் அமைந்திருக்கும் கேரளா, லட்சத்தீவுகள் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வு மரைன் மம்மல் என்ற இதழில் (Marine Mammal Science) வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் அரியவகை நீலத்திமிங்கலங்களின் வருகை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ |  டெல்டாவை விடவும் பயங்கரமான லாம்ப்டா வகை கொரொனா- மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சுற்றுலாத் தலமாக இருக்கும் லட்சத்தீவு பகுதியில் நீலத்திமிங்கலத்தின் வருகை இருப்பதால் கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. 2018 ஆம் ஆண்டு பிற்பகுதியிலும், 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலும், கேரளா மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.



அவற்றின் வருகையை பதிவு செய்வதற்காக குரல் பதிவு கருவிகளை ஸ்கூபா டைவர்ஸ் மூலம் பயன்படுத்திய ஆய்வாளர்கள், நீலத்திமிங்கலங்கள் பாடும் குரலை பதிவு செய்துள்ளனர். இந்த பதிவுகளின்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திமிங்கலங்களின் வருகை அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வில் ஈடுபட்டு வரும் திவ்யா பானிக்கரும் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தியுள்ளார். இந்திய கடல் பகுதியில் நீலத்திமிங்கலங்கள் இருப்பதை உறுதி செய்த அவர், இந்த அனுபவம் புதியதாக இருந்ததாக கூறியுள்ளார்.

ALSO READ |  'முகம்,உடலில் அதிக முடி வளர்ச்சி...மருத்துவமனையில் அதிர்ச்சி'- தன்னம்பிக்கை கொண்டு எழுந்து வந்த பெண்!

தொடர்ந்து பேசிய பானிக்கர், " இந்திய கடல் பகுதியில் நீலத்திமிங்கலங்கள் வருகை குறித்து ஆய்வில் ஈடுபட்டோம். அதற்காக தரவுகளை சேகரிக்க குரல் பதிவு கருவிகளை ஸ்கூபா டைவர்ஸ் உதவியுடன் பயன்படுத்தினோம். அதில், நீலத்திமிங்கலங்கள் வருகையை கண்டுபிடித்த நாங்கள், ஆய்வின்போது லட்சத்தீவு பகுதியில் ஒரு திமிங்கலத்தை நேரடியாக பார்த்தோம்" எனத் தெரிவித்தார்.



நீலத்திமிங்கலங்கள் எங்கிருந்து வருகின்றன? அவை எதற்காக இந்திய கடல் பகுதியில் குறிப்பிட்ட காலங்களில் முகாமிடுகின்றன? மீண்டும் அவை எங்கு செல்கின்றன? என்பது குறித்த ஆய்வை இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பானிக்கர் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ |  230 மில்லியன் ஆண்டு பழமையான பூப் – டைனோசர் முன்னோர்களின் கழிவில் இருந்து புதிய வண்டு இனங்கள் கண்டுபிடிப்பு!

இந்திய கடல் பகுதிக்குள் வரும் திமிங்கலங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு வெளியான பல்வேறு ஆய்வுகளிலும் இந்திய கடல் பகுதியில், அதாவது கேரள கடற்பரப்பான அரபிக்கடலில் திமிங்கலங்கள் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஆய்வுகளைக்காட்டிலும் ஆதாரப்பூர்வமாக தங்களின் ஆய்வு பல்வேறு தரவுகளைக் கொண்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக பானிக்கர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: