Home /News /national /

பாஜகவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபமடைகிறது - சோனியா காந்தி காட்டம்

பாஜகவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் வெறுப்பை விதைத்து லாபமடைகிறது - சோனியா காந்தி காட்டம்

சோனியா காந்தி

சோனியா காந்தி

Sonia Gandhi | Facebook | இந்தியாவில் தேர்தல் அரசியலில் சமூக ஊடகங்கள் தலையிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகிய நாளிதழ்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிப் பேசிய சோனியா காந்தி, மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பாஜகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு பேஸ்புக் நிறுவனம் சலுகைகளை வழங்கியதாக விமர்சித்தார். அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க தனது சொந்த விதிமுறைகளையே பேஸ்புக் நிறுவனம் மீறியதாகவும் சாடினார்.

    ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்வது இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் கவலை தெரிவித்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, யார் ஆட்சியில் இருந்தாலும் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனக் கூறிய சோனியாகாந்தி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் அரசியலில் பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக நிறுவனங்களின் தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    Also Read : சோனியாவின் விருப்பப்படி காங்., தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்: நவ்ஜோத் சிங் சித்து

    விருதுநகர் தொகுதி எம்.பி மாணிக்கம் தாகூர் பேசுகையில், தமிழகத்தில் சிறுவர்களின் தற்கொலையை வைத்து மத பதற்றத்தை தூண்டிவிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி அறிவுரை கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர மத்திய அரசு உதவ வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கோரிக்கை விடுத்தார்.

    மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கும் விதமாக தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமன்தய்யா கேள்விக்கு பதிலளித்த சாலை போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி, 2024ம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Congress, Parliament, Sonia Gandhi

    அடுத்த செய்தி