Home /News /national /

உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்துங்கள் - நீதித்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்துங்கள் - நீதித்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்துங்கள் - நீதித்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்துங்கள் - நீதித்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

இந்தி தேசிய மொழி என சரச்சைக்குரிய விவாதம் சமீப காலமாக நடைபெற்றுவரும் நிலையில், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டுமென நீதிபதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கில் பிரதமர் மோடி இக்கருத்தை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருடன் அசாம், சத்தீஸ்கர், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.

    கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நமது நாட்டில் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன. அதேபோல சட்ட மன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்கின்றன. இவை இரண்டும் இணைந்து மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் மேம்பாட்டிற்கு தொழில்நுட்பம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல நீதித்துறையும் காலத்திற்கேற்ப டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

    நாட்டின் நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை பயன்படுத்த நீதிபதிகள் ஊக்கப்படுத்த வேண்டும் இது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் அவர்களுக்கு நீதிமன்றத்துடனான உறவை நன்கு பலப்படுத்தும்" என்றார்.

    அண்மையில் நாட்டின் தேசிய மொழி இந்தி என்ற சர்ச்சை கிளம்பி விவாதம் ஆகி வரும் நிலையில் பிரதமர் உள்ளூர் மொழிகள் குறித்து கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி குறித்து கூறிய கருத்துக்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: 'அரசுத் துறைகளில் காலியாக உள்ள 10,000 பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்' - முதலமைச்சர் ரங்கசாமி

    அதேபோல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்விட்டரில் இந்தி மொழி தேசிய என கூறிய கருத்து கூறி இது தொடர்பாக கன்னட நடிகர் கிச்சா சுதீப் பதில் கருத்து தெரிவித்தது பெரும் விவாதத்தை கிளப்பியது. உத்தரப் பிரசேதத்தில் ஆளும் பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் ஒருவர் இந்தி பேசாதவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என சர்ச்சைகுரிய முறையில் பேசினார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Chief justice of india, High court, PM Modi

    அடுத்த செய்தி