ஹைதராபாத் என்கவுண்டர்! யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்

ஹைதராபாத் என்கவுண்டர்! யார் இந்த காவல் ஆணையாளர் விஸ்வநாத் சஜ்ஜனார்
சஜ்னார்
  • News18
  • Last Updated: December 6, 2019, 11:06 PM IST
  • Share this:
ஐதராபாத் திஷா சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனாரை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். 

1996-ம் ஆண்டு தேர்வான, ஐ.பி.எஸ். அதிகாரியான சஜ்ஜனார், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஆக அறியப்படுகிறார். 2008-ம் ஆண்டு, தெலங்கானாவின், வாரங்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது, இவரின் தலைமையில் ஓர் என்கவுன்டர் நடந்துள்ளது. இன்ஜினீயரிங் மாணவி ஒருவரை, ஸ்ரீனிவாஸ் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்துள்ளார். ஆனால், காதலை ஏற்க மறுத்ததால் ஸ்ரீனிவாஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவி மீது ஆசிட் வீசி தாக்கியுள்ளார்.

இந்த வழக்கில் தற்போது நடத்தப்பட்ட என்கவுன்டர் போன்று, சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற சஜ்ஜனார் தலைமையிலான குழு, ஆசிட் வீச்சில் ஈடுபட்டவர்களை சுட்டுக்கொன்றது. இதனிடையே, சஜ்ஜனார் சிறப்பு காவல் படை ஐ.ஜி.-யாக இருந்தபோது தான், நக்ஸலைட் அமைப்பைச் சேர்ந்த நயாமுதீன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹைதராபாத் திஷா சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போலீசாருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, தப்பியோட முயன்ற 4 பேரையும், என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல சஜ்ஜனார் உத்தரவிட்டுள்ளார்.


Also see:

 
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்