• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாராஷ்டிராவில் என்கவுன்டர் : மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக் கொலை

மகாராஷ்டிராவில் என்கவுன்டர் : மாவோயிஸ்டுகள் 8 பேர் சுட்டுக் கொலை

மாவோயிஸ்ட் அமைப்பில் இடம்பெற்றிருந்த முக்கிய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    மகாராஷ்டிராவில் கமாண்டோ படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவின் கோட்கால் - கியாராபதி வனப்பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. இங்கு மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள கமாண்டோ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் கமாண்டோ படையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர்.

    இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஆரம்பித்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் மாவோயிஸ்ட் அமைப்பில் இடம்பெற்றிருந்த முக்கிய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு கட்டத்தில் கமாண்டோ வீரர்களின் கை ஓங்கியிருந்தபோது, மாவோயிஸ்டுகள் தப்பிச் செல்லத் தொடங்கினர். அவர்களிடமிருந்து துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: