ENACT LAW TO MAKE FACEBOOK GOOGLE PAY FOR NEWS BJPS SUSHIL MODI MUT
செய்தி நிறுவனங்களுக்கு கூகுள், பேஸ்புக்தான் கட்டணம் செலுத்த வேண்டும்: ஆஸ்திரேலியா போல் இங்கும் சட்டம் வர வேண்டும்: சுஷில் குமார் மோடி
விளம்பரவருவாய் இழப்புக்கு பிரிண்ட் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இதனால் பேஸ்புக், ட்விட்டர், உள்ளிட்ட மகா சமூக ஊடக நிறுவனங்கள் தொகை அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்
விளம்பரவருவாய் இழப்புக்கு பிரிண்ட் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இதனால் பேஸ்புக், ட்விட்டர், உள்ளிட்ட மகா சமூக ஊடக நிறுவனங்கள் தொகை அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்
சமூக வலைதளங்களான, 'கூகுள், பேஸ்புக், யூடியூப்' போன்றவை, தாங்கள் பயன்படுத்தும் செய்திக்காக, அச்சு மற்றும் மின்னணு செய்தி நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ளதுபோல், இங்கும் சட்டம் நிறைவேற்ற வேண்டும், என, பாஜக எம்.பி., சுஷில் குமார் மோடி வலியுறுத்தினார்.
ராஜ்யசபாவில், நடந்த விவாதத்தின்போது, பீகார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷில் குமார் மோடி பேசியதாவது:அச்சு மற்றும் 'டிவி' ஊடகங்கள், கோடிக் கணக்கில் செலவிட்டு, நிருபர்கள் உள்ளிட்டோர் வாயிலாக, தகவல்களை சேகரிக்கின்றன. அவை சரிபார்க்கப்பட்டு, உண்மையான தகவல்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றன.
கூகுள், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், அந்த தகவல்களை பயன்படுத்திக் கொள்கின்றன. அச்சு ஊடகங்கள் உள்ளிட்டவற்றுக்கு கிடைத்து வந்த விளம்பரம், தற்போது சமூக வலைதளங்களுக்கு மாறியுள்ளது.இதனால், அச்சு ஊடகங்கள் வருவாயை இழந்து உள்ளன. இதை தடுக்கும் வகையில், தாங்கள் பயன்படுத்தும் செய்திகளுக்கு, அச்சு ஊடகங்களுக்கு, இந்த சமூக வலைதளங்கள் கட்டணம் செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நம் நாட்டிலும், இது போன்ற கட்டுப்பாடு வர வேண்டும். அப்போது தான், பாரம்பரியமான அச்சு ஊடகங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். நம் பார்லி.,யிலும், இது தொடர்பான சட்டம் நிறைவேற்ற வேண்டும் கூகுள், பேஸ்புக், போன்றவை அச்சு ஊடகங்களுடன் வருவாயைப் பகிர்ந்து கொள்ள நாம் வலியுறுத்த வேண்டும்.
அதாவது மரபான ஊடகங்களின் செய்திகள் பேஸ்புக் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு, ராஜ்யசபா தலை வரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பிரிட்ண்ட் மீடியாவுக்கு விளம்பரங்கள் குறைந்து இந்த ஊடகங்களுக்கு விளம்பர வருவாய் அதிகரித்துள்ளது, இதனால் அச்சு ஊடகங்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன என்று சுஷில் மோடி தெரிவித்தார்.
விளம்பரவருவாய் இழப்புக்கு பிரிண்ட் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு இதனால் பேஸ்புக், ட்விட்டர், உள்ளிட்ட மகா சமூக ஊடக நிறுவனங்கள் தொகை அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்கிறார், இதனை ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு, “பரிசீலிக்கத்தக்க ஆலோசனை” என்று வரவேற்றார்.