• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் கொரோனா தடுப்புமருந்து இல்லாமல் வெறும் ஊசியை செலுத்திய செவிலியர் - வைரலாகும் வீடியோ

பீகாரில் கொரோனா தடுப்புமருந்து இல்லாமல் வெறும் ஊசியை செலுத்திய செவிலியர் - வைரலாகும் வீடியோ

தடுப்பூசி செலுத்தும் செவிலியர்

தடுப்பூசி செலுத்தும் செவிலியர்

பீகாரில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா தடுப்பு மருந்தின்றி வெறும் ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    பீகாரில் தடுப்பூசி மருந்து இல்லாமல் வெறும் ஊசியை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சீனாவின் ஊஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. உலக நாடுகள் முழுவதையும் கொரோனா வைரஸ் சிதைத்துவிட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுவதும் வெளிவந்து பழைய வாழ்க்கைக்கு செல்ல தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதைத் தவிர்த்து ரஷ்யாவின் ஸ்புட்னிவி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த தொடக்கத்தில் பொதுமக்களிடையே தடுப்பூசி மீது அச்சம் நிலவியது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டனர். தற்போது, பொதுமக்கள் விருப்பத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்தநிலையில், பீகாரில் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடைபெற்றது. பீகாரில் இளைஞர் ஒருவருக்கு தடுப்பு மருந்தை செலுத்தாமல் வெறும் ஊசியை மட்டும் செவிலியர் செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருந்து ஏற்றாமல் ஊசியை மட்டும் செவிலியர் போடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதனையடுத்து, தவறிழைத்த செவிலியர் கொரோனா தடுப்பூசி போடும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர் , ‘நான் தடுப்பூசி போடும்போது என்னுடைய நண்பன் அதனை வீடியோவாக எடுத்தான். தடுப்பூசி போடும் நான் செய்யும் பாவனைகளைப் பதிவு செய்வதாக விளையாட்டாக அந்த வீடியோ எடுக்கப்பட்டது.



    வீட்டுக்குச் சென்ற பிறகு வீடியோ மீண்டும் பார்க்கும்போதுதான் கவரிலிருந்து ஊசியை எடுக்கும் செவிலியர் நேரடியாக என்னுடைய கையில் போட்டது தெரியவந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்னதாக, பீகாரில் ஒரு பெண்ணுக்கு ஐந்து நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு தடுப்பூசியும், கோவேக்சின் தடுப்பூசியும் அடுத்தடுத்து செலுத்தப்பட்டது. இந்த விவகாரமும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: