Home /News /national /

அலுவலகம் வரச்சொன்னால் வேலையே வேண்டாம் என கூறும் ஊழியர்கள் - அதிரவைக்கும் WFH ஆய்வு முடிவுகள்!

அலுவலகம் வரச்சொன்னால் வேலையே வேண்டாம் என கூறும் ஊழியர்கள் - அதிரவைக்கும் WFH ஆய்வு முடிவுகள்!

வீட்டில் இருந்தே வேலை

வீட்டில் இருந்தே வேலை

போர்சியா போல பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி கிடைக்காவிட்டால் வேலையையே துறக்க தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு 6 நிமிட மீட்டிங், போர்சியா ட்விட்சை ராஜினாமா செய்ய் வைத்துள்ளது.

ஆராய்ச்சி இணக்க நிபுணராக கடந்த பிப்ரவரியில் பணியில் சேர்ந்த போசியாவிடம் பெருந்தொற்று காலமாக இருப்பதாக் வீட்டிலிருந்தெ வேலை செய்யும் சூழல் என நிறுவனத்தின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. பின்னர் சமீப நாட்களாக அலுவலகத்திற்கு நேரில் வந்து மீட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டும் என தொடர்ச்சியான அழைப்பு வந்தது.

சரியென்று தன்னுடைய இரு குழந்தைகளையும் குழந்தை பராமரிப்பு மையத்தில் விட்டு விட்டு 6 நிமிடங்கள் மட்டுமே நடந்த மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார் அவர். ஆனால் ஆறே நிமிடங்களில் தன்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டு அவர் வீடுதிரும்பியிருக்கிறார்.

 

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் மரியெட்டா பகுதியில் வாழ்ந்து வரும் 33 வயதாகும் போர்சியா வேலையை ராஜினாமா செய்தது தொடர்பாக கூறுகையில், “வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு பதிலாக கண்டிப்பாக அலுவலகத்தில் வந்து தான் பணியாற்ற வேண்டும் என கூறினார்கள், அதனால் வேலையை ராஜினாமா செய்ததாக கூறி அதிரவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பரவல் பெருந்தொற்று காலத்தில், ஆரம்ப நாட்களில் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் லாக் டவுன் எனப்படும் பொதுமுடக்கம் போடப்பட்டதால் வேறு வழியில்லாமல் வீட்டில் இருந்து பணிபுரிய ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் வாய்ப்பளித்தன. ஓராண்டைக் கடந்து விட்ட நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துவிட்டதால் மீண்டும் அலுவலகத்தில் வந்தே பணியாற்றுங்கள் என நிறுவனங்கள் அவர்களின் ஊழியர்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வசதிக்கு பழகிவிட்டதால் பெரும்பாலான ஊழியர்கள் அதில் இருந்து வெளிவருவதில் பெரும் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

Also Read:   கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும் - சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் அறிக்கை!

போர்சியா போல பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதி கிடைக்காவிட்டால் வேலையையே துறக்க தயாராக இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்தே வேலை பார்ப்போரின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பது குறித்து FlexJobs என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.

இந்த ஆய்வின் மூலம் பணியாளர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்புகின்றனர். கண்டிப்பாக அலுவலகம் வந்து தான் பணியாற்ற வேண்டும் என தெரிவித்தால் தங்களின் வேலையை தயங்காமல் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

கண்டிப்பாக அலுவலகம் வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என கூறினால் 58% ஊழியர்கள் வேலையை விட்டு விடுவோம் என தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை உலகம் முழுவதும் 2,181 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

Also Read:  ஊரடங்கால் பறிபோன வேலை.. வாய்பேச, காதுகேட்க இயலாத பெற்றோர்: உணவின்றி தவித்துவருவதாக 9 வயது மகள் வெளியிட்ட ஆடியோ..!

இந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் 72% பேர் அமெரிக்கர்கள், 4% பேர் கனடாவையும், 24% பேர் பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள். மேலும் 74% பேர் பெண்கள்.

அலுவலகம் வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என கூறினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, 58% பேர் வேலையை விட்டு விடுவேன் என்றும், குழப்பமாக இருக்கிறது என 31% பேரும், அலுவலகம் சென்று விடுவோம் என 11% பேரும் தெரிவித்துள்ளனர்.

Also Read:  உயிர் வாழ முடியாத கிரகமாக வீனஸ் மாறியது ஏன்?

பெரும்பான்மையாவர்களின் எண்ண ஓட்டம் வீட்டில் இருந்தே பணியாற்றுவதில் தான் உள்ளது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. கொரோனா காலத்தில் கிடைத்த வீட்டில் இருந்தே வேலை ஆப்ஷனுக்கு பழகிவிட்ட ஊழியர்கள் தற்போது அதில் இருந்து மீள்வது கடினம் என்பதே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.
Published by:Arun
First published:

Tags: Jobs, Survey, Work From Home

அடுத்த செய்தி