இன்று பணியாளர் பாராட்டு தினம் - ஊழியர்கள் இன்றி உலகம் அசையாது!

இன்று பணியாளர் பாராட்டு தினம் - ஊழியர்கள் இன்றி உலகம் அசையாது!

மாதிரி படம்

2021-ம் ஆண்டிற்கான பணியாளர் பாராட்டு தினம் மார்ச் 5-ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. 2021-ம் ஆண்டிற்கான பணியாளர் பாராட்டு தினம் மார்ச் 5-ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது.

வரலாற்று ரீதியாக பார்த்தோமானால் கடந்த 1995-ம் ஆண்டு டாக்டர் பாப் நெல்சன் என்பவரால் அதிகாரப்பூர்வமற்ற விடுமுறை நாளாக "பணியாளர் பாராட்டு தினம்" அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் பணியாளர்களை அங்கீகரிப்பதற்கான விவகாரத்தில் உலகளாவியமுன்னணி வழக்கறிஞராக இருந்தார்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி ஊழியர்களின் உற்சாகத்தோடு பெரிதும் தொடர்புடையது என்பதையும், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் மன உறுதியை அதிகரிப்பது அவசியம் என்பதையும் உணர்ந்திருந்தார். மேலும் ஊழியர்களுக்கு முறையான அங்கீகாரம் தேவை என்பதை வலியுறுத்தும் பல்வேறு தலைப்புகளில், ஊழியர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கான 1,001 வழிகள் (இப்போது ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்க 1,501 வழிகள்) மற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்கான 1,001 வழிகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஊழியர்கள் - முதலாளிகள் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தி உரிய அங்கீகாரத்தை அளிப்பதன் மூலம் எதிர்பாராத அளவிற்கு நன்மைகள் ஏற்படும் என்றும் கருதினார்.

பணியாளர் பாராட்டு தினத்தின் நோக்கம்:

வருடம் முழுவதும் தங்களது கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிகள் மூலம் நிறுவனங்களின் வருமானத்தையும், பொருளாதாரத்தையும் பன்மடங்கு வளர செய்யும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நாள் இது. முதலாளி மற்றும் பணியாளர்கள் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தவும், பணியாளர்களுக்கான உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த "பணியாளர் பாராட்டு தினம்" உருவாக்கப்பட்டது.

நிர்வாகத்திற்கு ஊழியர்கள் மீதான நேர்மறையான எண்ணத்தை அதிகரிக்கவும் அதே சமயம் ஊழியர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நல்ல நிலையில் வேலை செய்திட ஏதுவான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சூழலை உறுதி செய்ய அருமையான வாய்ப்பாக இந்நாள் கருதப்படுகிறது. இந்த நாள், பணியாளர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நாளில் ஊழியர்களை பாராட்டுவதன் மூலமும், ஊழியர்களுக்கு நன்றி சொல்வதன் மூலமும், அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதன் மூலமும், நிறுவனங்கள் பணியாளர்களை தக்கவைத்து கொள்வதை ஊக்குவிக்கிறது எல்லாவற்றுக்கும் மேல் கடினமான பணிசூழலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Also read... 2021-ஆம் ஆண்டில் சிறந்த இலவச VPN சேவைகள்.. முழு விவரம்..

கருப்பொருள் யோசனைகள்:

இந்த நாளை ஆக்கப்பூர்வ மற்றும் எழுச்சியூட்டும் நாளாக மாற்றும் வகையில், ஊழியர்களை சுய பராமரிப்பில் ஈடுபட வைப்பது, சக பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுடன் நல்ல பிணைப்புகளை ஏற்படுத்துவது என ஊழியர்களுக்கு மிகவும் நிறைவான அனுபவத்தை வழங்கலாம். உதாரணமாக நன்றாக வேலை செய்யும் கடின உழைப்பாளிகளுக்கு உரிய விருதுகளை அறிமுகப்படுத்தலாம்.

ஊழியர்களின் மன அழுத்தத்தை முதலாளிகள் எவ்வாறு குறைப்பது.?

பணியாளர்கள் செய்யும் கடின வேலைகளை பார்த்ததும் நிர்வாகம் உடனுக்குடன் அவர்களை நெறி அழைத்து பேசி பாராட்டலாம். பணியாளர்களின் துயரங்களில் பங்கேற்பது, பணியாளர்களுக்கென தனி நேரம் கொடுத்து அவர்களை விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட செய்வது, திறன் மிக்க பணியாளர்களுக்கு பரிசுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களின் டென்ஷனை நிர்வாகம் குறைக்க உதவி செய்யலாம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: