”உணர்ச்சி மிகுதி போதாது: செயலில் காட்ட வேண்டும் பிரதமரே..!”- பினராயி விஜயன் தாக்கு

’இப்படித்தான் உணர்ச்சிப் பெருக்கில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனக்கு 50 நாட்கள் தாருங்கள் என்றார் பிரதமர்’.

”உணர்ச்சி மிகுதி போதாது: செயலில் காட்ட வேண்டும் பிரதமரே..!”- பினராயி விஜயன் தாக்கு
பினராயி விஜயன்.
  • News18
  • Last Updated: December 23, 2019, 5:18 PM IST
  • Share this:
‘உணர்ச்சி மிகுதி எல்லாம் போதாது. உங்களது செயலில் காட்டுங்கள்’ என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரளா ஒட்டுமொத்தமாக இணைந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. குடியுரிமைச் சட்டத்தை ஒருநாளும் ஆதரிக்கப்போவதில்லை என உறுதி தெரிவித்துள்ள கேரள முதல்வர் தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறையையும் பின்பற்ற மாட்டோம் என அறிவித்துள்ளார்.

மாதிரிப்படம்மேலும் பினராயி விஜயன் கூறுகையில், “மோடி டெல்லியில் பேசியது அமித் ஷா-வின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மோடி உறுதி சொல்கிறார். ஆனால், வெறும் உணர்ச்சி மிகுதியான வார்த்தைகள் போதாது. உங்கள் வார்த்தைகளை செயலில் காட்டுங்கள்.

நாட்டின் எந்தவொரு திட்டத்துக்கும் சாதியும் மதமும் அடிப்படைகளாக இருத்தல் கூடாது. குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படை பிரச்னையே அச்சட்டம் மதம் சார்ந்த பிரிவினையை ஏற்படுத்துவதே. மக்கள் ஒரு சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர உணர்ச்சிப் பெருக்கால் வெடிக்கக் கூடாது.

இப்படித்தான் உணர்ச்சிப் பெருக்கில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனக்கு 50 நாட்கள் தாருங்கள் என்றார் பிரதமர். என்ன நடந்தது என்பது நமக்கு எல்லாம் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பார்க்க: ’என் உருவ பொம்மையை வேண்டுமானால் எரித்துக்கொள்ளுங்கள்’... பிரதமர் மோடி உருக்கம்
First published: December 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading