இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி தவறுதான், ஆனால் இப்போது நடப்பது முற்றிலும் வேறு: ராகுல் காந்தி
இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சி தவறுதான், ஆனால் இப்போது நடப்பது முற்றிலும் வேறு: ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ். தற்போது நீதித்துறை, ஆட்சியதிகாரம், தேர்தல் ஆணையம், ஊடகம் என்று ஜனநாயக அமைப்புகளிலும் ஊடுருவியுள்ளது என்கிறார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த 1975-ம் ஆண்டு அடக்குமுறை நெருக்கடி நிலை பிரகடனம் அல்லது எமர்ஜென்சி தவறுதான் என்று ராகுல் காந்தி ஒப்புக் கொண்டார்.
ஆனால் இப்போதைய பாஜக ஆட்சி நிலைமை என்னவெனில் ஜனநாயக நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். தன் கைவசம் பிடித்து வைக்க முயற்சிக்கிறது, இது அபாயகரமானது என்று தன் பாட்டி இந்திரா காந்தி கொண்டு வந்த அவசரநிலை பிரகடனத்தை பேரன் ராகுல் காந்தி தவறு என்று ஒப்புக் கொள்ளும் போது கூறி வித்தியாசத்தை எடுத்துரைத்தார்.
கார்னெல் பல்கலைக் கழக பொருளாதாரத் துறைப் பேராசிரியரும், மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது பொருளாதார ஆலோசகராகவும் இருந்த கவுஷிக் பாசுவிடம் ராகுல் காந்தி ஆன்லைன் உரையாடல் மேற்கொண்ட போது இதனை தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் என்ற ஆர்.எஸ்.எஸ். தற்போது நீதித்துறை, ஆட்சியதிகாரம், தேர்தல் ஆணையம், ஊடகம் என்று ஜனநாயக அமைப்புகளிலும் ஊடுருவியுள்ளது என்கிறார் ராகுல் காந்தி.
ஜனநாயகம் பற்றி ராகுல் காந்தி கூறிய போது, ‘ஜனநாயகம் அரிக்கப்படுவது மட்டுமல்ல குரல்வளை நெரிக்கப்படுகிறது. நரேந்திர மோடி அரசு 2014-ல் ஆட்சியமைத்தது முதல் ஜனநாயகக் குரல்வளை நெரிக்கப்படுகிறது’ என்றார்.
மேலும் எமர்ஜென்சி பற்றிய கேள்விக்கு, “ஆம், அது தவறுதான், என் பாட்டி இந்திரா காந்தியும் இதைக் கூறுவார். காங்கிரஸ் கட்சி இந்தியாவின் ஜனநாயக அமைப்புகளை ஒரு போதும் கட்சி சார்பாக பிடித்து வைத்ததில்லை. உண்மையில் கூற வேண்டுமெனில் காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் திறமை இல்லை. எங்கள் வடிவமைப்பு எங்களை அப்படி செய்ய விடாது, நாங்கள் விரும்பினாலும் எங்கள் கட்சியின் வடிவமைப்பு அதைச் செய்ய அனுமதிக்காது.
தேர்தலில் கூட பாஜகவை வீழ்த்தி விடலாம் ஆனால் இந்த ஜனநாயக அமைப்புகளில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ். காரர்களை நீக்குவது கடினம்தான்.
மத்திய பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் என்னிடம் கூறினார், அதாவது முதல்வர் சொன்னாலே அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சார்புடைய அதிகாரிகள். எனவே இப்போது நடப்பதற்கும் 1975 எமர்ஜென்சிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.
உட்கட்சி ஜனநாயகத்தை வலியுறுத்த நான் காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தலை வலியுறுத்தினேன், ஆனால் இன்னொன்றும் இருக்கிறது, உட்கட்சி ஜனநாயகம் பற்றி ஏன் காங்கிரஸ் மீதே கேள்வி எழுப்பப்படுகிறது, பாஜக என்ன, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என்ன? இதற்கான காரணம் புரிகிறது, ஏனெனில் காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியான கட்சி, இந்திய அரசியல் சாசனக் கொள்கையே எங்கள் கொள்கை. அதனால் ஜனநயாகமாக இருப்பது எங்களுக்கு முக்கியத்துவம் ஆகும்” என்றார்.
மே, 1991-ல் ராஜீவ் காந்தி கொடூரமாக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொல்லப்பட்டது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ‘என் தந்தை மிகப்பெரிய சக்தியுடன் போராடினார், அதனால் அவர் தன் மரணத்தை நோக்கி நடக்கிறார் என்பது எனக்கு ஓரளவுக்குத் தெரிந்தது.
மிகவும் வலிநிறைந்தது அது. ஆனால் அதன் மூலம் வன்முறை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன், என்றார் ராகுல் காந்தி.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.