ஹோம் /நியூஸ் /இந்தியா /

எலான் மஸ்க்கின் அதிரடி முடிவு.. 75% பேரை வேலையிலிருந்து நீக்கப்போவதாக தகவல்!

எலான் மஸ்க்கின் அதிரடி முடிவு.. 75% பேரை வேலையிலிருந்து நீக்கப்போவதாக தகவல்!

எலான் மஸ்க்கின் அதிரடி முடிவு

எலான் மஸ்க்கின் அதிரடி முடிவு

ட்விட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது.ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் பலரை நீக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி சமூக வலைதளத்திலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ட்விட்டர் நிறுவனம் தற்போது எலான் மஸ்க்கின் வசமாகியுள்ளது.ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். . இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள எலான் மஸ்க், 75 விழுக்காடு பணியாளர்களை குறைக்கப்போவதாக பேசப்படும் நிலையில் ட்விட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அதிரடியாக நீக்கியிருந்தார்.இந்நிலையில், பணியாளர்களில் 75 சதவீதம் பேரை நீக்குவதற்கான நடவடிக்கையில் அவர் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : நடிகை கங்கனா ட்விட்டர் கணக்கை எலான் மஸ்க் மீட்டெடுப்பாரா?

ட்விட்டர் நிறுவனத்தில் தற்போது 7 ஆயிரத்து 500 பேர் பணியாற்றும் நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

மேலும் ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது குறித்து நடிகை கங்கனா ரனா மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவரது ட்விட்டர் கணக்கு கடந்த ஆண்டு நிரந்தரமாக இடைநிறுத்தப்பட்டது அதனை மீண்டும் பெற முடியும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Elon Musk, Twitter