Home /News /national /

டேக் டைவர்ஷன் - இந்தியாவிடம் முயற்சிகள் பலிக்கவில்லை... இந்தோனேசியாவிற்கு நடையை கட்டும் எலான் மஸ்க், காரணம் என்ன?

டேக் டைவர்ஷன் - இந்தியாவிடம் முயற்சிகள் பலிக்கவில்லை... இந்தோனேசியாவிற்கு நடையை கட்டும் எலான் மஸ்க், காரணம் என்ன?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

Elon Musk | இந்தியாவை சரி கட்டும் தனது முயற்சிகள் பலிக்காத நிலையில், பயணப் பாதையை இந்தோனேசியாவிற்கு மாற்றிக் கொள்ள எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.

    உலகெங்கிலும் உள்ள சாலைகளில் டெஸ்லா கார்கள் இயங்க வேண்டும் என்பது டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க்கின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு அடித்தளம் அமைக்க விரும்பும் அவர், டெஸ்லா கார்களை மாபெரும் அளவில் உற்பத்தி செய்வதற்கான மிகச் சரியான இடத்தை தேடிக் கொண்டிருக்கிறார்.

    குறிப்பாக, கார் தயாரிப்பில், அதற்கான உதிரி பாகங்களை தடையின்றி எளிமையாக, அருகாமையில் பெறுவதே மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த விஷயத்தை எலான் மஸ்க் நன்றாக புரிந்து கொண்டுவிட்டார் போல.

    முன்னதாக, இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு எலான் மஸ்க் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆனால், உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி சார்ந்த இந்தியாவின் உறுதியான கொள்கைகள் அவரை யோசிக்க வைத்தன. இதனால், இந்திய தரப்பை அணுகி, இதை சரி செய்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

    இந்தியா டூ இந்தோனேசியா

    இந்தியாவை சரி கட்டும் தனது முயற்சிகள் பலிக்காத நிலையில், பயணப் பாதையை இந்தோனேசியாவிற்கு மாற்றிக் கொள்ள எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். விரைவில் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடூடூ மற்றும் அந்நாட்டு அதிகாரிகளை சந்திக்கவும், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

    குறிப்பாக கார் பேட்டரிக்கு முக்கிய மூலப் பொருளாக இருக்கும் நிக்கல் என்ற கனிமம் இந்தோனேசியாவில் மிக அதிகப்படியாக கிடைக்கிறது. டெஸ்லா நிறுவனத்திற்கும், இந்தோனேசியாவிற்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்துவதாக இது அமையும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியா தனது வணிக வாய்ப்பை இழந்துள்ளது.

    முதலீடுகளை ஈர்க்கும் இந்தோனேசியா

    அண்மைக்காலமாகவே உலகெங்கிலும் உள்ள கார் உற்பத்தியாளர்களின் கண் பார்வை இந்தோனேசியாவை நோக்கி திரும்பியுள்ளது. பல்வேறு பேட்டரி உறுபத்தியாளர்கள் மற்றும் கார் உற்பத்தியாளர்கள் இந்தோனேசியாவை நோக்கி செல்கின்றனர். அந்நாட்டு அரசு வழங்கும் சலுகைகளே இதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. மேலும், விநியோகச் சங்கிலி சீராக இருக்கும் என்று அந்நாட்டு அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.

    ALSO READ | 3,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான தொங்கும் பாலம் திறப்பு

    முன்னணி நிறுவனங்களின் முதலீடு

    எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்கு சாதகமான கொள்கைகளை இந்தோனேசியா அரசு உருவாக்கியுள்ளது. இதனால், பல பில்லியன் கணக்கான டாலர் அளவில் அங்கு முதலீடுகள் சென்று கொண்டிருக்கின்றனர். அண்மையில் எல்ஜி எனர்ஜி சொல்யூஷன் மற்றும் இதர நிறுவனங்கள் இணைந்து, அங்கு 9 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தன. சுரங்கம் முதல் உற்பத்தி வரையிலான துறைகளில் இந்த முதலீடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தோனேசியாவில் பேட்டரி ஆலை ஒன்றை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அமைத்து வருகிறது. இதேபோல ஆம்பியர் எக்ஸ் நிறுவனம், சீனாவின் ஷெஜியாங் ஹோயூ கோபால்ட் போன்ற நிறுவனங்களும் இந்தோனேசியாவில் முதலீடு செய்கின்றன.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Elon Musk

    அடுத்த செய்தி