கேரளா மாநிலம் மலப்புரம் , கீழுபறம்பு பகுதியை சார்ந்த நாசர் என்பவருக்கு சொந்தமான யானைக்கு உணவு கொடுக்க 4 வயதுள்ள ஒரு சிறுவனும் சிறுவனின் தந்தையும் யானையின் அருகில் சென்றுள்ளனர்.
சிறுவன் உணவு கொடுக்க முயன்ற நேரத்தில் திடீரென மிரண்ட யானை அந்த சிறுவனை தும்பிக்கையில் தூக்கி சுற்றிவளைத்து உள்ளது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை யானையுடன் போராடி தனது சிறுவனை பெரிய போராட்டத்திற்கு பின் காப்பாற்றியுள்ளார்.
Must Read : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு
இந்த நிகழ்வு ஆறு மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது என்றாலும் இதன் செல்போன் காட்சிகள் தற்போது தான் வெளியாகியுள்ளது. 4 வயது தனது குழந்தையை காப்பாற்ற தந்தை நடத்திய போராட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.