Home /News /national /

மூதாட்டியை மிதித்து கொன்றும் ஆவேசம் தீராத யானை.! இறுதி சடங்கின் போதும் விடாமல் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

மூதாட்டியை மிதித்து கொன்றும் ஆவேசம் தீராத யானை.! இறுதி சடங்கின் போதும் விடாமல் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்

காட்டு யானை

காட்டு யானை

யானையால் மனிதர்கள் மிதித்து கொல்லப்படுவது அவ்வப்போது நிகழ்ந்து வரும் துரதிருஷ்ட சம்பவங்களாக இருந்து வருகின்றன.

    யானையால் மனிதர்கள் மிதித்து கொல்லப்படுவது அவ்வப்போது நிகழ்ந்து வரும் துரதிருஷ்ட சம்பவங்களாக இருந்து வருகின்றன. விலங்குகள் கோபம் கொள்வது இயற்கை என்றாலும் அவை பழி வாங்கும் விஷயத்தில் மனிதர்கள் மீதான தாக்குதல் தீவிரமாக மற்றும் மூர்க்கத்தனமாக இருக்கும்.

    அந்த வகையில் ஒடிசாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 70 வயது மூதாட்டி ஒருவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். குறிப்பிட்ட மூதாட்டியை மிதித்து கொன்ற அதே யானை, அவரது இறுதி சடங்கின் போதும் வந்து சடலத்தை மிதித்தது உள்ள சம்பவம் தான் கடும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது.

    யானையின் ஆவேச தாக்குதலில் பலியான மூதாட்டியின் பெயர் மாயா முர்மு (Maya Murmu). சம்பவத்தன்று காலை நேரத்தில் ராய்பால் கிராமத்தில் 70 வயதான மூதாட்டி மாயா முர்மு, தனது வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு குழாய் கிணற்றில் தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார். அப்போது தால்மா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து (Dalma Wildlife Sanctuary) வழி தவறி வந்த காட்டு யானை கூட்டம் ஒன்று அவரை வழிமறித்துள்ளது. காட்டு யானைகளைகண்ட மூதாட்டி மாயா முர்மு கடும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓட முயன்று இருக்கிறார்.

    7 ஆண்டுகளுக்கு பிறகும் ஒரே இடத்தில் வசிக்கும் தெரு நாய்.! கூகுள் மேப்ஸ் இமேஜால் நெட்டிசன்கள் வியப்பு.!

    தங்களிடமிருந்து மூதாட்டி தப்பி ஓடுவதை பார்த்த கூட்டத்தில் இருந்த காட்டு யானைகளில் ஒன்று அவரை துரத்தியது. ஒருகட்டத்தில் வேகமாக ஓட முடியாத மூதாட்டி அந்த குறிப்பிட்ட யானையிடம் சிக்கி கொண்டார். சிக்கிய மூதாட்டியை தாக்கிய யானை அவரை கடுமையாக மிதித்து விட்டது. தகவல் கிடைத்ததும் கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு பரிபாடாவில் உள்ள PRM மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. போஸ்ட்மார்ட்டம் முடிந்த பின் மாலையில் அவரது உடலை குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்வதற்காக வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

    இறுதி சங்குகள் முடிந்து சுடுகாட்டிற்கு மூதாட்டியின் உடலை எடுத்து உறவினர்கள் தயாரான போது, மாயா முர்முவை தாக்கி கொன்ற அதே காட்டு யானை மீண்டும் வந்துள்ளது. காட்டு யானையை பார்த்த உறவினர்கள் மூதாட்டியின் சடலத்தை போட்டு விட்டு தாங்கள் உயிர் தப்பிக்க நாலாபுறமும் சிதறி ஓடி உள்ளனர். கடும் ஆவேசத்தில் வந்த அந்த யானை மூதாட்டியின் சடலத்தை மீண்டும் மிதித்துள்ளது. பின்னர் மூதாட்டியின் வீட்டையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளது.

    காட்டு யானையிடமிருந்து தப்பிக்க பெண் ஒருவர் மரத்தில் ஏறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யானையின் ஆவேச தாக்குதலின் காரணமாக மேலும் மூன்று வீடுகளும் சேதமடைந்தன. மூதாட்டியின் சடலத்தை மிதித்தது மட்டுமின்றி தும்பிக்கையால் தூக்கி வீசியும் உள்ளது அந்த யானை. யானை தாக்குதலுக்கு பயந்து கிராம மக்கள் முர்முவின் இறுதிச் சடங்கை அன்று முடிக்க முடியாமல் அடுத்த நாள் காலை அந்த சுற்றுவட்டாரத்தை விட்டு யானைகள் கூட்டம் வெளியேறியதும் தான் இறுதிச் சடங்குகளை நடத்தி உள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி