ஹோம் /நியூஸ் /இந்தியா /

சார்ஜ் போடும் போது வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - மகாராஷ்டிராவில் 7 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

சார்ஜ் போடும் போது வெடித்து சிதறிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - மகாராஷ்டிராவில் 7 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பேட்டரி வெடித்ததில் 7 சிறுவன் சபீர் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  மகாராஷ்டிரா மாநிலத்தில் சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உயர் மின் அழுத்தத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

  நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஒருபுறம் அதிகரித்து வரும் சூழலில், இதற்கு மாற்றாக பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கேற்றால் போல் தான், ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனங்களும் மக்களின் வசதிகளுக்கு ஏற்ப வாகனங்களை வடிவமைத்து வருகின்றனர். இப்படி இன்றைய சூழலுக்கு ஏற்ப வாகன உற்பத்தி அதிகரித்து வந்தாலும் இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் ஒரு புறம் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் போடும் போது வெடிப்பதும், திடீரென வாகனங்கள் தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு சம்பவம் தான் சமீபத்தில் மகாராஷ்ராவில் அரங்கேறி மக்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய் பகுதியைச் சேர்ந்த ஷபீர் என்பவர் ஜெய்ப்பூரில் இருந்து அசெம்பிள் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிவந்துள்ளார். பின்னர் வீட்டில் வைத்து பேட்டரி சார்ஜ் செய்வதற்காக ஒரு அறையில் வைத்திருந்தார். இந்நிலையில் தான் செப்டம்பர் 23ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டரின் பேட்டரி சார்ஜ் செய்யப்படும்போது வெடித்து சிதறியது.

  இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் பதறி அடித்து கொண்டு எழுந்தனர். இந்த நிலையில் பேட்டரி வெடித்ததில் 7 சிறுவன் சபீர் அன்சாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 80 சதவீதம் அளவிற்கு தீக்காயம் உடலில் பரவியதால் அவசர சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதோடு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களும் உடைந்து சிதறியதால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிக வெப்பத்தால் பேட்டரி வெடித்து சிதறி இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிராண்ட் மற்றும் மாடல் எதுவும் இன்னமும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களாக தொடர்ச்சியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விபத்துக்குள்ளாவது நடந்துவருவதால், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஒருபுறம் எழுந்துவருகிறது. கடந்த சில மாதத்திற்கு தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலக்ட்ரிக் ஷோரூமிலேயே மின்சார வாகனம் தீப்பற்றியது முதல் முன்னதாக ஆந்திராவிலும் மின்சார இரு சக்கர வானங்கள் திடீரென தீ பிடித்து எரிந்தது மக்களிடம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  பெட்ரோல்,டீசல் விலை உயர்விற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்கும் இந்த சூழலில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Electric bike