மேற்கு வங்கத்தை விட காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்தது! மோடி கடும் தாக்கு

அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பல இடங்களில் வன்முறை நடைபெற்றது. பலர் கொல்லப்பட்டனர். வெற்றி பெற்றவர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

Web Desk | news18
Updated: May 15, 2019, 3:47 PM IST
மேற்கு வங்கத்தை விட காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்தது! மோடி கடும் தாக்கு
பிரதமர் மோடி
Web Desk | news18
Updated: May 15, 2019, 3:47 PM IST
மேற்கு வங்கத்தை விட ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என்று நியூஸ் 18- தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. ஆறு கட்ட வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளநிலையில், மே 19-ம் தேதி ஏழாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல் நிலவிவருகிறது.

ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவின்போது மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை நடைபெற்றது. நேற்று, மேற்கு வங்கத்துக்கு பிரச்சாரத்துக்காக சென்ற பா.ஜ.க தலைவர் அமித்ஷாவின் காரின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து, கொல்கத்தா முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி அளித்தார்.


அந்தப் பேட்டியில், ‘மேற்கு வங்கத்தைவிட ஜம்மு காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும், நடுநிலையாளர்களும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக அமைதியாக இருப்பதை நினைத்து நான் வருந்துகிறேன். என் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாக, அவர்கள் மேற்கு வங்கத்தில் நடைபெறும் எல்லாவற்றையும் மன்னித்துவிடுகிறார்கள்.

இது, நாட்டில் பெரும் பிரச்னையை உருவாக்கும். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது, எந்த வாக்குச் சாவடிகளிலும் வன்முறை ஏற்படவில்லை. ஆனால், அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் பல இடங்களில் வன்முறை நடைபெற்றது. பலர் கொல்லப்பட்டனர். வெற்றி பெற்றவர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வெற்றி பெற்ற பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அவர்கள், செய்த ஒரே தவறு, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதுதான். இதுகுறித்து, பா.ஜ.க, மார்க்ஸிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்புகின்றன. ஆனால், நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதுகுறித்து எதுவும் பேசுவதில்லை. பா.ஜ.க முதல்வர்களின் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பா.ஜ.கவின் பேரணிக்கு தடைவிதிக்கப்படுகிறது. காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கட்சிகளைப் பார்த்து மம்தா பானர்ஜி பயப்படவில்லை. பா.ஜ.கவைப் பார்த்துதான் அவர் பயப்படுகிறார்’ என்று தெரிவித்தார்.

Loading...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see:
First published: May 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...