18 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

18 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
18 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
  • Share this:
ஜூன் 19-ம் தேதி ஆந்திரா, குஜராத்தில் தலா 4 இடங்களுக்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 இடங்களுக்கும், ஜார்க்கண்ட்டில் 2 இடங்களுக்கும், மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒரு இடத்திற்கும் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்தல் நடைபெற்றால், அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன் மார்ச் 26-ம் தேதி 17 மாநிலங்களில் இருந்து 55 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் தமிழகத்திலிருந்து அதிமுக, திமுக சார்பில் தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் புதிய உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இன்னும் பதவியேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க...

அரசின் ஊழல்களை கடுகளவும் பின்வாங்காமல் மக்கள் முன் துயிலுரித்து காட்டுவோம் - ஆர்.எஸ்.பாரதி

 
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading