தேர்தல் நடத்தை விதிகள் என்ன...? வேட்பாளர்கள் என்ன செய்யக்கூடாது...?

Lok Sabha Election 2019 | தேர்தல் விதிமீறல் வழக்கு என்றே நீதிமன்றத்தில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

news18
Updated: March 11, 2019, 11:47 AM IST
தேர்தல் நடத்தை விதிகள் என்ன...? வேட்பாளர்கள் என்ன செய்யக்கூடாது...?
சித்தரிப்புப்படம்
news18
Updated: March 11, 2019, 11:47 AM IST
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் தேதிகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அந்த நிமிடம் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய அரசு பதவியேற்கும் வரை தேர்தல் ஆணையமே அதிகாரம் மிக்கதாக இருக்கும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், மக்களுக்கு எந்தவித நிதி உதவிகளையும் அளிப்பதாக அரசு அறிவிக்கக்கூடாது. “அதைச் செய்வேன், இதைச் செய்வேன்” என்று புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பை அள்ளி வீசக்கூடாது. புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு அனுமதிக்கக்கூடாது.

அமைச்சரோ அல்லது அரசியல் நிர்வாகிகளோ எந்த திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டக்கூடாது. எந்தவித திட்டத்துக்காகவும் தொடக்க விழாக்களை நடத்தக்கூடாது. அரசுப்பணி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் எந்தவித தற்காலிக அல்லது நிரந்தர பணி நியமனத்தை, பதவி உயர்வை அரசு அளிக்கக்கூடாது.

அமைச்சர்கள் தங்கள் அலுவலக பயணத்தை தேர்தல் பணியோடு இணைக்கக்கூடாது. அமைச்சர்கள் தேர்தல் பணிக்காக, அரசுக்கான அம்சங்களை பயன்படுத்தக்கூடாது. அரசு வாகனம், சுழல் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. சாதி, மதம் தொடர்பான உணர்ச்சியை தூண்டும் விதத்தில் செயல்படக்கூடாது.

சாதி, மத உணர்வுகளை வாக்குக்காக பயன்படுத்தக்கூடாது. கோவில், மசூதி, தேவாலயங்களை அரசியல் பிரசார தலமாக பயன்படுத்தக்கூடாது. அரசு பணத்தை செலவழித்து ஆளுங்கட்சியினர் விளம்பரம் செய்யக்கூடாது.

அரசு திட்டங்களில் குறிப்பிட்ட அரசியல் தலைவரின் பெயர், படம் இடம் பெறக்கூடாது. அப்படி இடம்பெறும் பெயர், படத்தை மறைக்க வேண்டும் ஆகிய அனைத்தும் விதிமுறைகள் ஆகும்.
Loading...
இந்த விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கும். அதனை அடுத்து சட்ட ரீதியான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும். எனினும், தேர்தல் விதிமீறல் வழக்கு என்றே நீதிமன்றத்தில் பல ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Also See...

First published: March 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...