ஹோம் /நியூஸ் /இந்தியா /

WATCH - ஓட்டு முக்கியம்.. அடர் பனி மலையில் 15 கிமீ தூரம் ஏறிச் சென்று தேர்தல் நடத்திய அலுவலர்கள்!

WATCH - ஓட்டு முக்கியம்.. அடர் பனி மலையில் 15 கிமீ தூரம் ஏறிச் சென்று தேர்தல் நடத்திய அலுவலர்கள்!

அடர் பனியில் தேர்தல் பணியாளர்கள்

அடர் பனியில் தேர்தல் பணியாளர்கள்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அடர் பனி மலையில் 15 கிமீ தூரம் ஏறிச் சென்று தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்திய காணொலி வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Himachal Pradesh, India

  இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 74.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணைய தகவலின் படி இமாச்சல் மாநிலத்தில் மொத்தம் 55.92 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக மொத்தம் 7,884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.

  தேர்தல் என்றால் அதில் பல சுவாரசியமான அம்சங்கள் இருப்பதையும் நாம் பார்க்கலாம். அரசியல் கட்சி வாக்குறுதிகள், வேட்பாளர்கள் போன்றவற்றில் பல தனித்துவமான அம்சங்கள் இருப்பது போலவே, வாக்குச் சாவடி மையத்தில் தனித்துவத்தை இமாச்சல பிரதேச மாநிலம் வைத்துள்ளது.

  இமயமலைத் தொடர்களால் சூழ்ந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிக்காலமாகும். அங்குள்ள குதேரா, பதேபூர், சம்பா ஆகிய பகுதிகளில் பனி சூழ்ந்த மலைப் பிரதேசங்களால் ஆனது. இருப்பினும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சற்றும் களைப்போ சலிப்போ அடையாமல் பனிமலைகளில் வாக்கு இயந்திரங்களை எடுத்துச் சென்று வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளனர்.

  இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இமாச்சலத்தில் உள்ள பார்மோர் சட்டப்பேரவைத் தொகுதியில் சசக் பட்டேரி என்ற வாக்குசாவடி உள்ளது.

  இதையும் படிங்க: ''பலபேர் என்னைய திட்டிட்டே இருக்காங்க... தினமும் 2-3 கிலோ வசைகளை சாப்பிடுகிறேன்'' கிண்டலடித்த பிரதமர் மோடி!

  இந்த இடத்திற்கு 15 கிமீ தூரம் அடர்ந்த பனி கொண்ட பாதையில் நடந்தே தான் செல்ல வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இந்த வாக்குச்சாவடிக்கு வாக்கு இயந்திரங்களை 6 மணிநேரம் நடந்தே சென்று தேர்தலை நடத்தி வெற்றிகரமாக திரும்பியுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் பனியில் நடந்து செல்லும் இந்த காட்சிகளை சமூக வலைத்தள வாசிகள் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Election, Himachal Pradesh, Snowfall