ஹோம் /நியூஸ் /இந்தியா /

மிசோரம் மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ!

மிசோரம் மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ!

பாஜக எம்.எல்.ஏ சக்மா

பாஜக எம்.எல்.ஏ சக்மா

Mizoram Results | கடந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வென்ற மிசோரம் தேசிய முன்னணி தற்போது, ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்களை நெருங்கி முன்னிலை வகித்து வருகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த சக்மா, தைசாவ்ங் தொகுதியில் வென்று அம்மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 40 இடங்களில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 21 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சியின் நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

காங்கிரஸ்

கடந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வென்ற மிசோரம் தேசிய முன்னணி தற்போது, ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்களை நெருங்கி முன்னிலை வகித்து வருகிறது. சுயேட்சைகள் 8 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

அம்மாநில முதல்வர் லால் தான்ஹாவ்லா போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியுள்ளார். காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த பி.டி.சக்மா, தைசாவ்ங் தொகுதியில் வென்று அம்மாநிலத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ என்ற பெயரைப் பெற்றுள்ளார். ஆனால், அம்மாநில பாஜக தலைவர் லுனா டெபாசிட் இழந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் நேரலையாக பார்க்க...

Also See..

First published:

Tags: 5 State Election, Mizoram