ஹோம் /நியூஸ் /இந்தியா /

மிசோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்!

மிசோரமில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Mizoram Assembly Election Results | கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சியின் நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சியான மிசோரம் தேசிய முன்னணியிடம் ஆட்சியை பறிகொடுக்க உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தமுள்ள 40 இடங்களில் தற்போது வரை ஆளும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி 21 இடங்களிலும், பாஜக 1 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த முறை அக்கட்சியின் நிலமை தலைகீழாக மாறியுள்ளது.

கடந்த தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வென்ற மிசோரம் தேசிய முன்னணி தற்போது, ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்களை நெருங்கி முன்னிலை வகித்து வருகிறது.

7 மாநிலங்கள் இருக்கும் நாட்டின் வடகிழக்கு பகுதியில், மிசோரமில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது. மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

Also See..

First published:

Tags: 5 State Election, Mizoram