இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் காங்கிரஸ்?

குறைந்தபட்டம் 55 இடங்களை பிடிக்கும் கட்சி மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும்

Web Desk | news18
Updated: May 23, 2019, 3:25 PM IST
இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் காங்கிரஸ்?
ராகுல் காந்தி. (PTI Photo)
Web Desk | news18
Updated: May 23, 2019, 3:25 PM IST
மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 55 தொகுதிகள் குறைந்தபட்சம் பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது. அதேவேளையில், 2014-ல் பெற்ற வெற்றியை விட பாஜக விஸ்வரூப வெற்றியை பெற்றுள்ளது.

கடந்த 2014 தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

குறைந்தபட்டம் 55 இடங்களை பிடிக்கும் கட்சி மக்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் அமரும். ஆனால், கடந்த முறையும் காங்கிரஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த தேர்தலிலும் தற்போது வரை காங்கிரஸ் 51 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால், இம்முறையும் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமர்வது சந்தேகமாக உள்ளது.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...