உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்துள்ளார். அதேபோல, உத்ரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் தோல்வியடைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையிலும் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 24 தொகுதிகளில் பா.ஜ.க தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தேசிய மக்கள் 6 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேசம், உத்ராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்ளுக்கு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி தொடங்கி கடந்த மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் பாஜக - சமாஜ்வாடி இடையே இருமுனை போட்டி நிலவினாலும், பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம்- பகுஜன் சமாஜ் கூட்டணி என பலமுனை போட்டி நிலவுகிறது. எனினும் டெல்லிக்கு அடுத்தபடியாக அங்கு ஆம் ஆத்மிஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது.
70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே இழுபறி ஏற்படலாம் என கருதப்படுகிறது. 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாஜகவில் சீட் மறுக்கப்பட்டதால் பஞ்சிம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன், உத்பால் பாரிக்கர் வெற்றி பெறுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மணிப்பூரை பொறுத்தவரை அங்குள்ள 60 தொதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும் அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.