• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • election results | மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தகவல்களின்படி பாஜக-திரிணாமூல் கடும் போட்டி

election results | மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தகவல்களின்படி பாஜக-திரிணாமூல் கடும் போட்டி

மம்தா-மோடி

மம்தா-மோடி

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்களில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  • Share this:
    மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியுள்ளன. இதில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்களில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    67 இடங்களுக்கான முன்னிலையில் தபால் வாக்குகளில் பாஜக 34 இடங்களிலும் திரிணாமூல் 32 இடங்களிலும் இடதுசாரிகள் 1 இடத்திலும் முன்னிலை வகிப்பதாகக் கூறப்படுகிறது.

    ஆனால் மற்றொரு தகவலின் படி 78 இடங்களில் திரிணாமூல் 40 இடங்களிலும் பாஜக 38 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. ஆகவே இன்னமும் தெளிவான முன்னிலை நிலவரங்கள் பற்றி தகவல்கள் இல்லை, முரண்பட்ட தகவல்கள் வந்தாலும், பாஜக திரிணாமூல் இடையே கடும் போட்டி இருப்பதாக தெரிகிறது.

    சரிசமமாக இரு கட்சிகளும் சென்று கொண்டிருக்கின்றன.

    கேரளாவில் முதலில் காங்கிரஸ் முன்னிலை வகித்திருந்தது போக தற்போது 28 இடங்களில் இடது ஜனநாயக முன்னிலையிலும் காங்கிரஸ் 27 இடங்களிஉம் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அசாமில் பாஜக 10 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் ஏஜேபி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

    தமிழகத்தில் 10 தொகுதிகளில் திமுகவும் 6 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன. புதுச்சேரியில் 3 இடங்களில் என்.ஆர்.சியும் 1 இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன.

    ஈவிஎம்-ல் பதிவான வாக்குகள் இப்போதுதான் எண்ணப்படத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: