Election Result | West Bengal election results 2021 | Mamata | நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

Election Result | West Bengal election results 2021 | Mamata | நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு

மமதா பானர்ஜி

முதல் 2 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி டிக்கெட் பெற்ற சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை விட 4497 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

  • Share this:
    மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தலில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, இதில் பரவலாக எதிர்பார்க்கப்படும் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி பின்னடைவு கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    முதல் 2 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி டிக்கெட் பெற்ற சுவேந்து அதிகாரி மம்தா பானர்ஜியை விட 4497 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்தமாக ஆரம்பத்தில் கடும் போட்டியாக திரிணாமூல், பாஜக இரு கட்சிகளும் சம பலத்தில் சென்று கொண்டிருந்தனர், ஆனால் தற்போதைய நிலவரங்களின் படி பாஜக வெற்றி கொஞ்சம் பின்னடைவு கண்டு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. 268 தொகுதிகளுக்கான முன்னிலையில் திரிணாமூல் 141 இடங்களிலும் பாஜக 122 இடங்களிலும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    முக்கியத் தலைவர்கள் முன்னிலை - பின்னடைவு நிலவரம்:

    சிபிஐ-எம் வேட்பாளர் அசோக் பட்டாச்சாரியா சிலிகுரி தொகுதியில் பின்னடைவு கண்டுள்ளார்.

    தெற்கு தினாஜ்பூரில் பாஜக வேட்பாளர் அசோக் லாகிரி முன்னிலை வகிக்கிறார்.

    சந்திதலாவில் சிபிஎம் வேட்பாளர் முகமது சலீம் பின்னடைவு.

    தேவ்கிராம்-ஃபுல்பாரி தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் கவுதம் தேவ் பின்னிலை

    மாண்டேஸ்வரில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் சித்திக்குல்லா சவுத்ரி பின்னிலை.

    ரஜர்ஹாத்-கோபால்பூர் தொகுதியில் பாஜகவின் சமிக் பட்டாச்சாரியா முன்னிலை வகிக்கிறார்.

    கடைசி நிலவரங்களின்படி மேற்கு வங்கத்தில் திரிணாமூல் 144 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 124 தொகுதிகளிலும் இடது சாரி, காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
    Published by:Muthukumar
    First published: