மக்களவைக்குள் நுழையும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்!

மே மாதம் 23-ம் தேதி வெளியான மக்களவை தேர்தல் 2019 முடிவுகளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் எம்.பி.க்கள் ஆகியுள்ளார்கள்.

மக்களவைக்குள் நுழையும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்!
சுமலதா அம்பரீஷ்
  • News18
  • Last Updated: May 25, 2019, 12:47 PM IST
  • Share this:
மக்களவை மற்றும் சட்ட மன்றத் தேர்தல்களில் சுயேச்சைகள் வெற்றிபெறுவது அபூர்வமாகியுள்ளது. இந்நிலையில் மே மாதம் 23-ம் தேதி வெளியான மக்களவை தேர்தல் 2019 முடிவுகளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் எம்.பி.க்கள் ஆகியுள்ளார்கள்.

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி சுயேட்சைகளும் சில இடங்களில் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.

நடிகை சுமலதா அம்பரீஷ்:
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் கீழ் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரும், கன்னட நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா 2019 மக்களவை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

கர்நாடகாவில் நடைபெற்று வந்த கடந்த இரண்டு சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அம்பரீஷ் புறக்கணிக்கப்பட்டு வந்ததில் அவரது குடும்பம் மிகவும் அதிருப்தி அடைந்திருந்தது.

எனவே காங்கிரஸ் கட்சியை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட்ட அவரது மனைவி சுமலதா மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை 1,25,622 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சுயேச்சையாக வெற்றிபெற்று எம்.பி ஆகியுள்ளார்.

Loading...

நடிகை நவ்னித் ரவிரானா:


மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதியில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த்ராவ்-ஐ 37,295 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சுயேச்சையாக எம்.பி ஆகியுள்ளார்.

நவகுமார் சாரணியா:


அசாம் மாநிலம் கோக்ரஜார் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட நவகுமார் சாரணியா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரமிளா ராணி பரம்மாவை 39,146 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி சுயேச்சையாக வெற்றிபெற்றுள்ளார்.

மோகன்பாய் சஜ்சிபய் டெல்கார்:


தாத்ரா நகர் ஹவேலி தொகுதியில் பாஜக கட்சியின் சிட்டிங் எம்.பி-ஐ எதிர்த்து போட்டியிட்ட மோகன்பாய் சஜ்சிபய் டெல்கார் 9,015 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பின்னுக்குத்தள்ளி சுயேச்சையாக வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

மேலும் பார்க்க:
First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...