தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன- தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் கடந்த 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றது.

Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 11:18 AM IST
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன- தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Tamilarasu J | news18
Updated: May 27, 2019, 11:18 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் கடந்த 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றது.

இதேபோல, ஆந்திரா, அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது.

இதில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் முற்றிலும் வெளியானதால், நடத்தை விதிகள் உடனடியாக முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: May 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...