ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு- சசி தரூர் தரப்பு பகீர் கடிதம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் முறைகேடு- சசி தரூர் தரப்பு பகீர் கடிதம்

சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே

சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே

Congress presidential election results: உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு சட்ட விதிமுறைகளின் படி சீல் வைக்கப்படவில்லை என்றும், தேர்தல் நடக்கும் சமயத்திலும், முடிந்த பிறகும் அங்கீகரிக்கப்படாத நபர்கள்  மூலம் மோசடியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டது - சசி தரூர் கடிதம்

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்கு  எண்ணிக்கை இன்று காலை 10 மணி முதல் தொடங்கியது. மாலை 4 மணிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதன் வாக்குகள் செல்லாது  என்று அறிவிக்கக் கோரி சசி தருரின் தேர்தல் முகவர் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் கடந்த திங்களன்று நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் போட்டியிட்டனர். அகில இந்திய அளவில் 9,915 காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் 695 வாக்குகள் பதிவாகின.

  புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,   வேட்பாளர் சசி தரூரின் தேர்தல் முகவர், காங்கிரஸ்  மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசுதன்  மிஸ்டரி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

  உத்தர பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு சட்ட விதிமுறைகளின் படி சீல் வைக்கப்படவில்லை என்றும், தேர்தல் நடக்கும் சமயத்திலும், முடிந்த பிறகும் அங்கீகரிக்கப்படாத நபர்கள்  மூலம் மோசடியாக வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், லக்னோ உள்ளிட்ட சாவடிகளில் வாக்குப்பதிவு சான்றிதழ் உரிய முறையில் இல்லை என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை

  பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பாதுகாப்பு நெறிமுறைகளில் சிறு சிறு விதிமீறல்கள் இருந்தாலும், நியாமானதாகவும், வெளிப்படைத்தமையுடன் நடைபெற்றதை மறுப்பதற்கில்லை. ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முற்றிலும் நம்பகத் தன்மை இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றதற்கான பல்வேறு  சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அம்மாநிலத்தின் வாக்குகள் செல்லாதது என்று அறிவிக்க சசி தரூர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  Published by:Salanraj R
  First published:

  Tags: Congress