• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

கேரளாவில் இம்மாதம் 21ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • Share this:
    கேரளாவில் இம்மாதம் 21ஆம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் 3 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அப்துல் வகாப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கே.கே.ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), வயலார் ரவி (காங்கிரஸ்) ஆகியோரின் பதவிக்காலம் வருகிற 21ஆம் தேதி முடிவடைகிறது.

    இதனால், அந்த இடங்களுக்கான தேர்தல் இம்மாதம் 30ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கை இன்று வெளியிடப்படும் என்றும், ஏப்ரல் 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் தற்போது காலியாகும் 3 இடங்களுக்கு கடந்த 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த தேர்தலை, தேர்தல் ஆணையம் திடீரென நிறுத்திவைத்திருந்தது. இந்நிலையில் குறிப்பிட்ட 3 இடங்களுக்கான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    Must Read : மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை

     

    கேரளாவில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை காலதாமதம் இன்றி நடத்த வேண்டும் என இடதுசாரி கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: