இன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம்!

வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலிறுத்தியுள்ளனர்.

இன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம்!
தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 22, 2019, 8:02 AM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதே சமயம், ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு பின்னர், வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து ஐயங்களை எழுப்பி வரும் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், இடதுசாரிகள் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சிகள், அதுகுறித்த கோரிக்கை மனு ஒன்றை தேர்தல் ஆணையர்களிடம் நேரில் வழங்கின.

அந்த மனுவில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே, ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்றும், பிரச்சினைகள் நடந்த வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளையும், ஒப்புகைச்சீட்டுகளோடு ஒப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்கள், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தொகுதிக்கு 5 வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை, ஒப்புகை சீட்டுகளுடன் பொருத்தி பார்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Sunil-Arora | சுனில் அரோரா
சுனில் அரோரா


தேர்தலில் நல்லாட்சி உருவானால் மட்டுமே தேர்தல் ஆணையம் போன்ற அரசு தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்களில் அரசியல் தலையீடு இருக்காது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.22 எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தோ வாக்கு எண்ணிக்கை குறித்தோ ஏதேனும் புகார் எழுந்தால் இந்த மையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா


காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். அதே நேரத்தில், ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, பின்னர், வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட நடத்தப்பட உள்ளன.

இதற்கிடையே, பிரதமர் மோடி மீதான விதிமீறல் புகார்களில் மாற்றுக் கருத்தை பதிவு செய்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்றும் சுனில் அரோரா கூறியுள்ளார்.

Also see... நொடிக்கு நொடி தேர்தல் முடிவுகளை அறிய நியூஸ் 18

Also see....
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading