• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • வாக்குச்சாவடிக்குச் செல்லாமலே வாக்களிக்கும் ‘ரிமோட் ஓட்டிங்’ முறை: விரைவில் சோதனை- சுனில் அரோரா

வாக்குச்சாவடிக்குச் செல்லாமலே வாக்களிக்கும் ‘ரிமோட் ஓட்டிங்’ முறை: விரைவில் சோதனை- சுனில் அரோரா

சுனில் அரோரா

சுனில் அரோரா

உதாரணமாக சென்னை வாக்காளர் ஒருவர் டெல்லியில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் ஊருக்கு வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

  • Share this:
    ஏற்கெனவே இவிஎம் வாக்கு எந்திரத்தின் மீதான விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை என்ற நிலையில் வாக்குச் சாவடிக்குச் செல்லாமலே வீட்டிலிருந்தபடியே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறையை விரைவில் சோதனை செய்துப் பார்க்கப் போவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

    நாட்டின், 11வது தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறும்போது, “இது தொடர்பாக நல்ல முன்னேற்றம் உள்ளது, எனவே ரிமோட் வாக்களித்தல் முறை விரைவில் சோதனை முறையில் நடத்தப்படும்.

    இந்த தொழில்நுட்பத்தை, சென்னை, ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, ஆய்வு செய்து வருகிறோம். 'ரிமோட் ஓட்டிங்' எனப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் வாயிலாக, தேர்தலின்போது, தங்கள் தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு நேரில் செல்லாமல், வாக்காளர்களால் ஓட்டளிக்க இயலும். நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், அங்கு, அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்துக்குச் சென்று, வாக்காளர்கள் ஓட்டளிக்கலாம்.”

    இதைத்தவிர, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள், தபால் ஓட்டு முறையில் ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள பரிந்துரையை, சட்டத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது என்றார்.

    இந்தத் தொழில்நுட்பத்தை விளக்கிய முன்னாள் உதவி தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா, பிளாக் செயின் என்று அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தில் இருவழி வாக்களிக்கும் முறை உள்ளது, இதற்கென்றே பிரத்யேக இணையதள இணைப்புகளும் வழங்கப்படும். வெப் கேமராக், பயோமெட்ரிக் சாதனங்களுடன் இந்த முறை சோதனை செய்யப்படவுள்ளது.

    அதாவது வீட்டிலிருந்தபடியே வாக்களிப்பது என்பது அல்ல, தேர்தலின்போது, இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மையத்திற்கு நேரில் சென்று ஓட்டளிக்க வேண்டும். அதாவது டெல்லியில் இருந்தபடியே சென்னையில் உள்ள தன் வாக்கை அவர் பதிவிட முடியும். இதில், வாக்காளர் அடையாளம் சரிபார்க்கப்பட்ட பிற்பாடு பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் தனிப்பயனுக்குரிய ஈ-வாக்குச்சீட்டு உருவாக்கப்படும். வாக்களித்தவுடன் வாக்குச்சீட்டு பாதுகாப்புடன் என்கிரிப்ட் செய்யப்பட்டு பிளாக்செயின் ஹேஷ்டேக் உருவாக்கப்படும். இந்த ஹேஷ்டேக் அறிவிக்கை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பப்படும். இப்படி என்கிரிப்ட் செய்யப்பட்ட வாக்குகள் மீண்டும் ஒருமுறை ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாகச் சரிபார்க்கப்படும்.

    உதாரணமாக சென்னை வாக்காளர் ஒருவர் டெல்லியில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன் ஊருக்கு வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இவர் தேர்தல் ஆணையம் முன்குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வரவேண்டும், உதாரணத்துக்கு டெல்லி கனாட் பிளேசுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அங்கு வந்து தன் வாக்குகளை ரிமோட் மூலம் சென்னையில் தன் வாக்கு உள்ள தொகுதிக்கு வாக்களிக்கலாம். ஆனால் இதனை வாக்காளர்கள் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும், என்றார் சக்சேனா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: